Search
  • Follow NativePlanet
Share

நதௌன் – ஹிமாசல் மாநிலத்தின் ராஜமாகாணம்

8

ஹிமாச்சல பிரதேஷ மாநிலத்தில் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள  இந்த நதௌன் நகரம் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் உயரத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் அற்புதமான இயற்கைக்காட்சிகளை பயணிகளுக்கு வழங்குகிறது. வரலாற்றுக்குறிப்புகளின்படி நதௌன் ஜாகிர் எனும் ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இது திகழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோடைக்காலத்தில் காங்க்ரா மன்னர் மஹாராஜா சன்சார் சந்த் அவர்களின் ஓய்வு ஸ்தலமாகவும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நகரம் பல விசேஷமான சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்ரீ குருத்வாரா சாஹீப், பில் காளேஷ்வர் கோயில் மற்றும் அம்தர் நதௌன் கோட்டை ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும்.

சீக்கிய இனத்தாரின் புனிதத்தலமான குருத்வாரா சாஹீப் பியாஸ் ஆற்றின் கரையில் உள்ளது. பில் காளேஷ்வர் கோயிலும் நதௌன் ஸ்தலத்தில் பயணிகள் தவறாமல் விஜயம் செய்யவேண்டிய திருத்தலமாகும். நாட்டுப்புற நம்பிக்கைகளின்படி இக்கோயில் மஹாபாரத பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமானுக்கான இக்கோயில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான யாத்ரீக பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.

அம்தர் நதௌன் கோட்டை பயணிகளால் அதிகம் விரும்பப்படும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இங்கு கடோச் வம்சத்தைச்சேர்ந்த மஹாராஜா சன்சார் சந்த் அவர்களின் ராஜ பாரம்பரிய உன்னதங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை காணலாம்.

இது தவிர பீர் சாஹீப் கல்லறையும் நதௌன் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். மீன் பிடிப்பு மற்றும் பியாஸ் ஆற்றில் மிதவைப்படகுச்சவாரி போன்றவற்றிலும் பயணிகள் ஈடுபடலாம்.

நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக பயணிகள் எளிதில் சென்றடையலாம். கக்கல் விமான நிலையம் மற்றும் ஜ்வாலாமுகி ரோட் ரயில்வே ஸ்டேஷன் போன்றவை இந்த நகரத்திற்கு அருகில் உள்ளன.

மே மாதத்தில் துவங்கி ஜுலை வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வது நல்லது. இனிமையான சூழல் நிலவுவதால் குளிர்காலத்திலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

நதௌன் சிறப்பு

நதௌன் வானிலை

சிறந்த காலநிலை நதௌன்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நதௌன்

  • சாலை வழியாக
    பேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் நதௌன் சுற்றுலாத்தலத்தை அடையலாம். தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் அருகிலுள்ள சிம்லா, சண்டிகர் மற்றும் ஹொஷியாபூர் போன்ற நகரங்களிலிருந்து நதௌன் நகருக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 88 மற்றும் 70 போன்றவற்றின் வழியாக நதௌன் நகரை வந்தடையலாம். நதௌன் பேருந்து நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் இந்த சுற்றுலாத்தலத்தை சுற்றிப்பார்க்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நதௌன் நகரத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் 25 கி.மீ தூரத்தில் உள்ள ஜ்வாலாமுகி ரயில்நிலையமாகும். இது தவிர 44 கி.மீ துரத்தில் உள்ள காங்க்ரா ரயில் நிலையம் மூலமாகவும் நதௌன் நகரத்துக்கு வரலாம். இந்த ரயில் நிலையங்களிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பயணிகள் நதௌன் சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கக்கல் விமான நிலையம் நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். இது 60 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சண்டிகர், டெல்லி மற்றும் குலு போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மூலம் நதௌன் நகருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed