பீர்- இந்தியாவின் பேராகிளைடிங் தலைநகரம்!

இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் பீர் முக்கியமானது. இந்த பட்டணத்தின் பெரும்பான்மையான மக்கள் அண்டை நாடான திபெத்தில் இருந்து வந்த அகதிகள் ஆவார்கள். இவ்விடம் டீர் பார்க் இன்ஸ்டிடியூட் மற்றும் தர்மாலயா இன்ஸ்டிடியூட் போன்ற பல்வேறு இறையியல் படிப்புகளுக்கு பெயர்பெற்றது.

கல்வி மையங்கள் மட்டுமில்லாமல், சாகச விளையாட்டுக்களுக்கும் பீர் ஒரு புகழ்பெற்ற இடம் ஆகும். ’இந்தியாவின் பேராகிளைடிங் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் இப்பட்டனத்தில் பல்வேறு பேராகிளைடிங் விளையாட்டுக்கள் இடம்பெற்று உள்ளன.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில், சுற்றுலாத் துறை, பயணியர் விமான போக்குவரத்து மற்றும் இமாச்சல பிரதேச அரசாங்கம் ஆகியவை ஒரு ‘பேராகிளைடிங் உலக கோப்பை’ நிகழ்வை இங்கே நடத்துகிறார்கள். இந்த உலகளாவிய பேராகிளைடிங் போட்டி எண்ணற்ற பார்வையாளர்களை ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு ஈர்த்து வருகின்றது.

மேலும், ஹேங்-கிளைடிங் என்று அழைக்கப்படும் மற்றும் ஒரு சாகச செயலை பயணிகள் செய்து பார்க்கலாம். 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த விளையாட்டு நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து வருகின்றது.

1984 முதல், மூன்று சர்வதேச மற்றும் ஐந்து தேசிய அளவிலான ஹேங்-கிளைடிங் நிகழ்வுகளை பீர் நிகழ்த்தி இருக்கிறது. இமாச்சல பிரதேச சுற்றுலா கழகம் அல்லது எச்டிடிசி இந்த விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

சிக்லிங் கொம்பா, பீர் தேனீர் தொழிற்சாலை மற்றும் திபெத்திய குடியிருப்பு ஆகிய இடங்களையும் பயணிகள் பார்வையிடலாம்.

பீருக்கு நெருக்கமான விமானதளம், 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பத்தன்கோட் உள்நாட்டு விமானநிலையம். புது தில்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் இவ்விடத்திற்கு நெருக்கமான சர்வதேச விமானநிலையம் ஆகும்.

இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ள பத்தன்கோட் தொடர்வண்டி நிலையமே பீருக்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி இணைப்பு. சண்டிகர் மற்றும் புதுதில்லி போன்ற நகரங்களில் இருந்து பயணிகள் சுலபமாக பேருந்துகள் மூலமாக பீரை அடையலாம்.

இந்த அழகான மலைப்பிரதேசத்தின் வானிலை எப்போதும் இனிமையாக இருப்பதால், ஆண்டின் எல்லா காலங்களிலும் பயணிகள் இங்கு வரலாம்.

Please Wait while comments are loading...