பௌண்டா சாஹிப் – சீக்கியர்களின் புனிதத்தலம்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகான மலை நகரமான பௌண்டா சாஹிப் சுற்றுலாப் பயணியரின் சொர்க்கமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்விடத்திற்கு வரும் பயணிகள் இதன் அழகைப் பார்த்து மெய்சிலிர்த்து போவது நிச்சயம். இயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அழகான புண்ணிய பூமியான இது வளர்ந்து வரும் தொழிற்சாலைகளின் இடமாகவும் விளங்குகிறது.

சிர்மௌர் ராஜா மைதினி பிரகாஷின் அழைப்பின் பேரில் நான்கு ஆண்டுகள் இங்கு வாழ்ந்த 10 வது சீக்கிய குரு, குரு கோபிந்த் சிங், இவ்வரலாற்று நகரை நிறுவினார். அவர் 16 வயதாக இருக்கும் போது இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

சொற்பிறப்பியலில், ‘பௌண்டா’ என்றால் 'கால் தடத்தை பதித்த ஒரு இடம்' எனப்படுகிறது. சால் மரங்கள் சூழ்ந்த பசுமைக் காடுகளை கொண்ட பௌண்டா சாஹிப் 350 மீட்டர் அகல எல்லையைக் கொண்டுள்ளது.

ஒரு புராணப்படி, குரு கோபிந்த் சிங், தனது தஸ்ஸம் கிரந்த் என்ற சீக்கிய சமய நூலை எழுத, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த யமுனை நதி அவரது கட்டளைப்படி அமைதியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பௌண்டா சாஹிப்பை சுற்றி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றுள் அஸான் ஏரியும் சஹஸ்த்ரதாராவும் மிகப்பிரபலம். பௌண்டா சாஹிப் செல்ல விரும்பும் பயணிகள் இமாசலப் பிரதேச  சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அஸான் ஏரியை தவறாது பார்வையிட வேண்டும்.

பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சமான வேக படகோட்டுதல், துடுப்பு படகோட்டுதல், கால்மிதி படகோட்டுதல், பாய்மர படகோட்டுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். தமஸா என்றழைக்கப்படும் தாங் நதி மற்றும் யமுனா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சஹஸ்ரதாரா உள்ளது.

பௌண்டா சாஹிப் நகரம், குருத்வாரா பவன்டா சாஹிப், குருத்வாரா திர்கர்ஹ் சாஹிப், குருத்வாரா பாங்கனி சாஹிப், மற்றும் குருத்வாரா ஷேர்கர்ஹ் சாஹிப் உட்பட பிறவற்றையும் சேர்த்து, அதன் சீக்கிய புனித யாத்திரை மையங்களால் அறியப்படுகிறது.

தேய்-கா-மந்திர், க்ஹோட்ரா டக் பதர், நக்நவ்நா கோயில், ராமர் கோயில், கடசன் தேவி கோயில், யமுனா கோயில், சிவன் கோயில், மற்றும் பாபா கரிப்  நாத் கோவில் போன்றவை இந்தப் பகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

பௌண்டா சாஹிப்பை அனுபவிக்க திட்டமிடும் பயணிகள் எளிதாக விமானம், ரயில் அல்லது சாலைகள் வழியாக இந்த இலக்கை அடையலாம். கோடை, இலையுதிர், மற்றும் வசந்த காலங்கள் இந்த இடத்திற்கு செல்ல சிறந்த பருவங்கள் ஆகும்.

Please Wait while comments are loading...