Search
  • Follow NativePlanet
Share

சலோக்ரா – மலையேற்றப் பிரியர்களின் சொர்க்கம்!

4

சலோக்ரா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம்  ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் சோலன் நகரிலிருந்து 5.3 கி.மீ தூரத்தில் உள்ளது. பல ரம்மியமான கிராமப்புறங்கள் இப்பகுதியில் நிரம்பியுள்ளன. இவற்றில் தோப்-கி-பெரஹ், மாஹி, பஸால் மற்றும் மாஷிவார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கண்டகாட், சோலன், தரம்பூர் மற்றும் குனிஹார் போன்ற முக்கியமான இதர சுற்றுலா நகரங்களும் சலோக்ராவுக்கு அருகில் அமைந்துள்ளன.

க்ரோல் கா திப்பா எனும் அழகிய செழிப்பான மலை ரம்மியமான இயற்கை வனப்போடு இந்த ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது.

பசுமையான பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருக்கும் சலோக்ரா சுற்றுலாப்பயணிகளுக்கு திகட்டாத இயற்கைக்காட்சிகளை வாரி வழங்குகிறது. சிவனுக்கான ஒரு புகழ்பெற்ற கோயிலும் இப்பகுதியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் பரோக் எனும் இடத்தில் உள்ளது.

சலோக்ராவுக்கு வருகை தரும் பயணிகள் இங்கிருந்து 41 கி.மீ தூரத்திலுள்ள சிம்லாவுக்கும் விஜயம் செய்யலாம். பயணிகளுக்கான ஏராளமான சுற்றுலா அம்சங்கள் சிம்லா நகரில் நிரம்பியுள்ளன.

மேலும் சலோக்ரா சுற்றுலாத்தலம் கல்கா ரயில் நிலையத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் இதர முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு சுலபமாக பயணிக்கலாம்.

சலோக்ரா நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி  அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் துவங்கி ஜுன் வரையிலான காலம் இப்பகுதிக்கு சுற்றுலா விஜயம் செய்ய உகந்ததாக உள்ளது.

தவிர கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டாலும் இணைக்கமான சூழல் நிலவுவதால் குளிர்காலத்திலும் இப்பகுதிக்கு விஜயம் செய்து மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

சலோக்ரா சிறப்பு

சலோக்ரா வானிலை

சிறந்த காலநிலை சலோக்ரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சலோக்ரா

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் பேருந்துகள் மூலமும் சலோக்ராவுக்கு விஜயம் செய்யலாம். 22ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் சுலபமாக சலோக்ராவை அடையலாம். அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கின்றன என்பதும் தனியார் சேவைகள் சண்டிகரிலிருந்து சலோக்ரா செல்ல 200 ரூபாய் வரை வசூலிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சலோக்ராவிற்கு அருகில் கல்கா ரயில் நிலையம் மற்றும் சிம்லா ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. ஹிமாலயன் குயீன் எக்ஸ்பிரஸ், கல்கா சிம்லா பாஸ் மற்றும் கல்கா ஷிம்லா எக்ஸ்பிரஸ் எனும் மூன்று முக்கிய ரயில் சேவைகளின் மூலம் இந்த நிலையங்களை பயணிகள் சென்றடையலாம். இவற்றில் சலோக்ரா செல்வதற்கு சாதாரண இரண்டாம் வகுப்புக்கு 36 ரூபாயும், முதல் வகுப்புக்கு 228 ரூபாயாகவும் கட்டணம் இருக்கக்கூடும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சண்டிகர் விமான நிலையம் சலோக்ரா ஸ்தலத்துக்கு மிக அருகில் உள்ளது. இங்கிருந்து டெல்லி, மும்பை, ஜெய்பூர் மற்றும் ஷீநகர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் சலோக்ரா ஸ்தலத்துக்கு வரலாம். 1000 ரூபாய் என்ற அளவில் இதற்கான வாடகை இருக்கக்கூடும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat