Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சலோக்ரா » வானிலை

சலோக்ரா வானிலை

சலோக்ரா பகுதியை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் செல்வது சிறந்தது. மேலும், குளிர்காலத்தில் சாதகமான சூழல் நிலவுவதால் இப்பகுதியில் டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு உகந்ததாக உள்ளது.  

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : சலோக்ராவில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 35°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 15°C வெப்பநிலையும் காணப்படுகிறது. மே மாதத்தில் குறிப்பாக அதிக உஷ்ணம் காணப்படுகிறது. இருப்பினும் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் இரவில் ஓரளவு குளுமை நிலவுகிறது.

மழைக்காலம்

( ஜூன் முதல் செப்டம்பர் வரை) : சலோக்ராவில் ஜூன்துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம்  நிலவுகிறது.  மழைக்காலத்தில் தென்மேற்குபருவ மழைப்பொழிவை சலோக்ரா பிரதேசம் பெறுகிறது.  சுற்றிலும் பளிச்சென்ற பசுமையுடன் இயற்கைக்காட்சிகள் ஜொலிப்பதால் மழைக்காலத்திலும் பயணிகள் இங்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

( டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : சலோக்ரா பிரதேசத்தில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகிறது. குளிர்காலத்தில் அதிகபட்சமாக 15°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக -2°C வெப்பநிலையும் இப்பகுதியில் நிலவுகிறது. டிரெக்கிங் செய்வதற்கு சாதகமான பருவமாகவும் குளிர்காலம் விளங்குகிறது.