ரொஹ்ரு – அழகிய மலைத்தொடரும், அற்புதமான காடுகளும்!

ரொஹ்ரு, கடல் மட்டத்திலிருந்து 1525மீ உயரத்தில், பாப்பர் நதிக்கரையில் அமைந்துள்ள இடமாகும். ஆப்பிள் பண்ணைகளுக்காக புகழ் பெற்று விளங்கும் ரோரு, ஒரு நகராட்சி குழுவை ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் வைத்துள்ளது. ரிச் ரெட் (Rich Red) மற்றும் ராயல் டெலிசியஸ் (Royal Delicious) ஆகியவை இந்த பகுதிகளில் கிடைக்கக் கூடிய மிகவும் புகழ்பெற்ற ஆப்பிள் வகைகளாகும்.

ரொஹ்ரு நன்னீர் மீன்பிடிப்பிற்கு மிகவும் பெயர் பெற்ற இடமாகும். இந்த இடத்தின் மீது மிகவும் விருப்பத்துடன் இருந்த ராஜா பஹதூர் சிங் என்பவர் இந்த நகரத்தை வளர்ச்சியடையச் செய்து, புகழ் பெற்ற மீன்பிடி தளமாக மாற்றினார். சாகசத்தை விரும்புபவர்கள் இந்த இடத்தில் மலையேற்றம், பாரா கிளைடிங் மற்றும் ஹேண்ட் கிளைடிங் போன்ற விளையாட்டுகளை விளையாட முடியும்.

ரொஹ்ருவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள சுற்றுலா தலங்களான, சிக்ரு தேவ்தா கோவில், சிரகோன், தோட்ரா மற்றும் சன்ஷால் மலைத்தொடர் ஆகியவற்றுக்கும் செல்லலாம்.

மேலும், பாப்பர் நதிக்கரையில் உள்ள ஹட்கோட்டி-யும் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இந்துக்களின் புனித தலமாக விளங்கும் இந்த இடம், மூன்று நீரோடைகள் சந்திக்கும் இடமான 'சங்கம்' என்ற இடத்தில் உள்ளது.

புராணக்கதைகளின் படி, ஹட்கோட்டியில் இந்துக் கடவுளான சிவபெருமானும், அவருடைய துணைவியாரான பார்வதி தேவியும் ஒருவரையொருவர் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரொஹ்ரு நகரத்தை விமானம், இரயில் மற்றும் சாலை என்று எந்த மார்கத்திலும் சுலபமாக அடைய முடியும். சிம்லாவில் உள்ள ஜுப்பர்ஹாட்டி விமான நிலையம் தான் ரொஹ்ருவிற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

புதுடெல்லியிலிருந்து சிம்லாவிற்கு தொடர்ச்சியான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 443கிமீ தொலைவில் உள்ள புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குமான இணைப்பு விமானங்களையும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து பெற முடியும்.

165கிமீ தொலைவில் உள்ள கல்கா இரயில் நிலையம் ரொஹ்ருவிற்கு மிக அருகிலுள்ள இரயில் நிலையமாகும். சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை கல்கா இரயில் நிலையத்திலிருந்து பெற முடியும். ரொஹ்ருவை சாலை வழியாக அடைய சிம்லாவில் இருந்து தொடர்ச்சியான பேருந்து சேவைகளும் உண்டு.

வருடத்தின் எல்லா நாட்களிலும் மிதமான வெப்பநிலையுடன் இருக்கும் ரொஹ்ரு நகரம், குளிர்காலத்தில் மட்டும் பூஜ்யத்திற்கு கீழான வெப்பநிலைக்கு சென்று நடுங்க வைத்துவிடும். கோடைகாலங்களில் இந்த இடத்தின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸிலிருந்து 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மழை பெய்யும் இடமாக ரொஹ்ரு இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த மழைக்கால உடுப்புகளை எடுத்துச் செல்லுதல் நலம்.

கடுங்குளிராக இருக்கும் குளிர்காலத்தில் ரொஹ்ருவின் வெப்பநிலையானது 10 டிகிரி செல்சியஸிலிருந்து -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து விடும். குளிர் காலத்தில் இந்த இடத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் மொத்தமான கம்பளி ஆடைகளை கொண்டு வரவேண்டும். இந்த இடத்திற்கு வருகை தர சிறந்த தருணம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான பகுதி தான்.

Please Wait while comments are loading...