Search
  • Follow NativePlanet
Share

ஷோஜா – அமைதியும்! ஏகாந்தமும்!

11

ஷோஜா எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சேராஜ் பள்ளத்தாக்கு பகுதியில், ஜலோரி பாஸ் எனும் மலைப்பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2368 மீ உயரத்தில் ஷோஜா வீற்றிருக்கிறது. பனிபடர்ந்த இமயமலையை இப்பகுதியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

சேரோல்சார் ஏரி, ரகுபுர் கோட்டை, நீர்வீழ்ச்சி தளம், ஜலோரி பாஸ் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு போன்றவை ஷோஜாவில் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். ஜலோரி பாஸ் அதன் உறுதியான உலோகப்பாதைக்காக பிரசித்தி பெற்றிருப்பதோடு ஷோஜாவை சிம்லா மற்றும் இதர நகரங்களுடன் இணைக்கிறது.

ஜலோரி பாஸ் பாதையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள செரோல்சார் ஏரி ஷோஜாவில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். முக்கிய ஆன்மீகத்தலமான பூதி நாகின் கோயில் இப்பகுதியில் அமைந்துள்ளது. 100 மகன்களை கொண்டுள்ள தெய்வமாக கருதப்படும் பூதி நாகின் இப்பிரதேசத்தை காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது.

வாட்டர்ஃபால் பாயிண்ட் எனப்படும் நீர்வீழ்ச்சிப்பகுதி ஷோஜாவில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும். இயற்கையின் மடியில் வீற்றிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி பகுதி அசரவைக்கும் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.

ஷோஜாவிலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த இடத்திற்கு காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏராளமானோர் வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையும் இனிப்பும் நிரம்பியதாக காணப்படுகிறது.

ஷோஜா சுற்றுலாஸ்தலமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி  அமைந்துள்ளது.

குலு மணாலி விமான நிலையம் என்று அழைக்கப்படும் புந்தர் விமான நிலையம் ஷோஜாவுக்கு அருகில் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா மற்றும் டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன.

ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஷோஜாவுக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது164 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் குல்லு நகரத்திலிருந்து பேருந்துகள் மூலமாக ஷோஜா சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

ஷோஜா பகுதியின் பருவநிலை வருடம் முழுக்க மிதமானதாகவே காணப்படுகிறது. இருப்பினும் கோடைக்காலம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக உள்ளது.

ஷோஜா சிறப்பு

ஷோஜா வானிலை

சிறந்த காலநிலை ஷோஜா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷோஜா

  • சாலை வழியாக
    குலு நகரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் ஷோஜாவுக்கு வரலாம். ஹிமாசல் பிரதேச மாநில அரசுப்பேருந்துகள் குல்லு நகரத்தை மற்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. சிம்லா, பதான்கோட், சண்டிகர் மற்றும் டெல்லியிலிருந்து ஹிமாசல் பிரதேஷ் சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் (HPTDC) இயக்கப்படும் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் ஷோஜா நகரத்திற்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஷோஜா நகரத்திற்கு அருகில் ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் 164 கி.மீ தூரத்தில் உள்ளது. சிம்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது சண்டிகர் ரயில் நிலையம் வழியாக நாட்டின் இதர முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமாக பயணிகள் ஷோஜா சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    குல்லுமணாலி விமான நிலையம் எனப்படும் புந்தர் விமான நிலையம் ஷோஜாவுக்கு அருகில் 80 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா மற்றும் டெல்லிக்கு விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து டெல்லி, சிம்லா, பதான்கோட், சண்டிகர் மற்றும் தரம்ஷாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புந்தருக்கு இணைப்பு விமான சேவைகளும் உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat