Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஷோஜா » வானிலை

ஷோஜா வானிலை

இதமான இனிமையான சூழல் நிலவுவதால் கோடைக்காலமே  ஷோஜா சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்து வெளிப்புற அழகை சுற்றிப்பார்த்து ரசிக்க உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஷோஜா நகரத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் இறுதி வரை  கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 5°C வெப்பநிலையும் நிலவுகிறது. கோடையில் இங்கு இனிமையான சூழல் நிலவுவதால் சுற்றுலாப்பயணிகள் கோடைக்காலத்தில் விஜயம் செய்வதையே விரும்புகின்றனர்.

மழைக்காலம்

( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : ஷோஜா பிரதேசத்தில் ஜூலை துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நிலவும் மழைக்காலத்தில் மிதமான மழைப்பொழிவு காணப்படுகிறது.  சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் நிலவுவதால் பயணிகள் மழைக்காலத்திலும் ஷோஜா நகரத்திற்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

( டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஷோஜா பிரதேசத்தில் டிசம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 0°C க்கும் கீழே வெப்பநிலை குறைந்து காணப்படுவதுடன் கடுமையான பனிப்பொழிவும் நிலவுகிறது. எனவே குளிர்காலத்தில் பயணிகள் ஷோஜாவுக்கு விஜயம் செய்வதை தவிர்ப்பது நல்லது.