ரொஹ்ரு வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Rohru, India 8 ℃ Clear
காற்று: 8 from the NE ஈரப்பதம்: 55% அழுத்தம்: 1015 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 23 Oct 3 ℃ 37 ℉ 17 ℃62 ℉
Tuesday 24 Oct 3 ℃ 37 ℉ 16 ℃60 ℉
Wednesday 25 Oct 7 ℃ 45 ℉ 16 ℃61 ℉
Thursday 26 Oct 4 ℃ 38 ℉ 19 ℃65 ℉
Friday 27 Oct 3 ℃ 38 ℉ 17 ℃63 ℉

ரொஹ்ருவிற்கு வருகை தர சிறந்த தருணம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான பகுதி தான். இந்த காலகட்டத்தில் மிதமாக இருக்கும் வெப்பநிலை, ஹேண்ட் கிளைடிங், மீன்பிடிப்பு, பாராகிளைடிங் மற்றும் ரிவர் ராப்டிங் போன்ற விளையாட்டுகளுக்கு ஏதுவானதாக இருக்கும். இதற்குப் பிறகு வரும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் காணப்படும் கடுமையான குளிரானது வெளிப்புற விளையாட்டுகளை முழுமையாக தடை செய்துவிடும்.

கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரையில் நீடிக்கும் கோடைகாலங்களில் ரொஹ்ருவின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸிலிருந்து 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த நாட்களில் இங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகும். இதன் காரணமாகவே இந்த காலகட்டம் ரொஹ்ருவை பார்வையிட சிறந்த காலமாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

ஜுலை மாதம் தொடங்கும் மழைக்காலம் அக்டோபர் மாதத்ததின் இறுதி வரை நீடித்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மழை பெய்யும் இடமாக ரொஹ்ருவை வைத்திருக்கும். இந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் தகுந்த மழைக்கால உடுப்புகளை எடுத்துச் செல்லுதல் நலம். சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தில் காணப்படும் பசுமையான தாவரங்களின் கண்கவரும் இயற்கையழகை ரசித்திடுவதற்கு மிகச்சிறந்த காலமாக இது கருதப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலம் கடுங்குளிராக இருக்கும். இந்த குளிர்காலத்தில் ரொஹ்ருவின் வெப்பநிலையானது அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸிலிருந்து -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து விடும். சில்லென்ற காற்று வீசும் குளிரான இடத்தை விரும்புபவர்கள் குளிர் காலத்தில் இந்த இடத்திற்கு வருகை தரலாம்.