Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லா » ஈர்க்கும் இடங்கள் » காம்ரு கோட்டை

காம்ரு கோட்டை, சாங்க்லா

22

கடல் மட்டத்திலிருந்து 2600மீ உயரத்திலுள்ள காம்ரு கோட்டை, பாஸ்பா நதியின் கரையில் அமைந்துள்ளது. சிம்லாவில் இருந்து 229கிமீ தொலைவிலும், சாங்லா பள்ளத்தாக்கிலிருந்து 2கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த கோட்டை, ஹிமாச்சல பிரதேசத்தின் பழமையான கோட்டைகளுள் ஒன்றாகும்.

இந்த கோவிலின் தலைவாயிலில் புத்தரின் படம் ஒன்றையும் காணலாம். மரத்தால் செய்யப்பட்ட பால்கனி இந்த கோட்டையின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.

காமாட்சி தேவி என்று பரவலாக அறியப்படும் காமாக்யா தேவி என்ற இந்து கடவுளின் சிலை இந்த கோட்டையின் மூன்றாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலை கௌகாத்தியிலிருந்து கொண்டு வரப்பட்டதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

மேலும், பழமையான கோவில்களுள் ஒன்றாக கருதப்படும் பத்ரிநாத் கோவிலும் காம்ரு கோட்டையில் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு 15வது நூற்றாண்டைச் சேர்ந்தது.

இந்த கோவிலிலுள்ள தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெரிய கண்காட்சி ஒன்று நடத்தப்படுகிறது. ராக்ச்சம் கிராமம், சிட்குல் கிராமம்ற மற்றும் பாட்ஸேரி கிராமம் ஆகிய அழகிய இடங்கள் இந்த கோட்டையைச் சுற்றிலும் உள்ளன. பழைய இந்தோ-திபெத் வாணிப வழிப்பாதைகளில் அமைந்துள்ள கடைசி கிராமம் சிட்குல் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu