உலகின் மிக உயரமான ஜீப் வாகனப் பாதை என்ற புகழைப்பெற்றுள்ள இந்த ரோஹ்தங் பாஸ் எனும் மலைப்பாதை கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது.
மணாலியிலிருந்து 51 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த பாதையானது குல்லு பகுதியை லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி பகுதியுடன் இணைக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 4111மீ உயரத்தில் அமைந்துள்ள ரோஹ்தங் பாஸ் அழகிய மலைக்காட்சிகள், பள்ளத்தாக்குச்சரிவுகள் மற்றும் பனிச்சிகரங்களின் அழகை வாரி வழங்குகிறது.
மற்ற சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்து செல்லும் பாதையாக மட்டுமல்லாமல் மலையேற்றத்துக்கான பெருவழியாகவும் காணப்படுகிறது. இந்த மலைப்பாதை ஸ்தலத்தில் பயணிகள் பனிச்சறுக்கு, பாராகிளைடிங், டிரக்கிங் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம்.
மே மாதத்தில் பயணிகளுக்காக திறந்துவிடப்படும் இப்பாதை செப்டம்பர் மாதத்தில் கடும்பனிப்பொழிவு காரணமாக மூடப்படும். ரோஹ்தங் பாஸ் எனப்படும் இந்த மலைப்பாதையி; கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அபாயகரமான சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய ராணுவத்திடம் விசேஷ அனுமதி பெற வேண்டியிருக்கும் என்பதும் முக்கியமான தகவலாகும்.