Search
  • Follow NativePlanet
Share

சொஹ்னா - இயற்கையின் கண்கொள்ளா அழகு!

3

சொஹ்னா என்ற நகரம் ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு நகராட்சி செயற்குழுவாகும். சொஹ்னா என்ற இந்த சிறிய நகரம் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது, முக்கியமாக வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்கு. இது குர்கானிலிருந்து அல்வாருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சொஹ்னா மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஆரவல்லி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சொஹ்னா நகரம், இங்குள்ள வெந்நீர் ஊற்று மற்றும் பழங்கால சிவன் கோவிலுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கங்காஸ்நான் என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதோடு மற்றொரு திருவிழாவான டீஜ் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுகிறது. மலை மீது இருக்கும் ஒரு பெரிய பூங்காவும் இங்கிருக்கும் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும்.

இதை ஹரியானா சுற்றுலாத்துறை பராமரித்து வருகிறது. இங்கு தங்கும் வசதிகளும், ஒரு உணவகமும் உள்ளது. இங்கிருந்து நகரின் அழகை கண்டு களிக்கலாம்.

அழகிய இயற்கை சூழலுடன் உள்ள டம்டமா ஏரியும் இங்கு புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இங்கு படகு சவாரி செய்தபடியே இயற்கை அழகை ரசிக்கலாம். மேலும் பிப்ரவரி மாதம் இங்கு நடத்தப்படும் விண்டேஜ் கார்களின் ஊர்வலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கும்.

சொஹ்னாவை சுற்றிப் பார்க்க உகந்த நேரம்

இளவேனிற் காலத்தில், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, இங்கு வருவதே சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

சொஹ்னாவை அடைவது எப்படி?

குர்கானிலிருந்து சொஹ்னாவை, சொஹ்னா சாலை வழியாக அடையலாம்.

சொஹ்னா சிறப்பு

சொஹ்னா வானிலை

சிறந்த காலநிலை சொஹ்னா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சொஹ்னா

  • சாலை வழியாக
    டெல்லி, குர்கான் மற்றும் பத்வால் போன்ற ஊர்களில் இருந்து சொஹ்னாவிற்கு பேருந்து சேவைகள் உள்ளன. அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தினால் சிக்கனமாக இங்கு வந்து சேரலாம். இங்கிருந்து டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச நகரங்களுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இதற்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் 29 கி.மீ. தொலைவில் குர்கானில் உள்ள இரயில் நிலையமாகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சொஹ்னாவிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் இங்கிருந்து 43 கி.மீ. தொலைவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயங்குகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue