Search
  • Follow NativePlanet
Share

நுஹ் - வரலாற்று மிச்சங்கள் மற்றும் சமயஞ்சார்ந்த ஸ்தலங்கள்!

6

நுஹ் நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவத் மாநகராட்சியில் டெல்லி-அல்வார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கசேராவை சேர்ந்த பகதூர் சிங் என்பவரின் காலத்தில் தான் இந்நகரம் முக்கியத்துவம் பெற்றது. அதற்கு காரணம் இதன் அருகில் இருக்கும் கிராமங்களில் தயாரிக்கப்பட்ட உப்புகளை வைத்து இங்கே வணிகம் செய்யப்பட்டது. இவர் காலத்தில் இது உப்பு வணிகத்தின் முதன்மையான வணிக மையமாக விளங்கியது. 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல வரலாற்று அழிபாடுகளை இங்கே காணலாம்.

நுஹ் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

வரலாற்று அழிவுகளின் மிச்சங்கள் மற்றும் சமயஞ்சார்ந்த இடங்கள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள ஷேக்கிங் மினரெட்ஸ் என்ற இடம் தான் பழங்கால பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

மேலும் இது தான் நுஹ்ஹில் உள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாகும். மர வேலைபாடுகளுடன் கூடிய  செம்மணற்கல் நிரப்பிய சுய் மை குளம் ஒன்று சத்ரி எனப்படும் கட்டத்தில் உள்ளது. நுஹ்ஹிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆரவல்லி மலையின் கீழ் நல்லாத் என்ற கிராமத்தில் ஒரு இயற்கையான நீர்த் தேக்கம் உள்ளது.

இதில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த நீர்த் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வழிந்தபடியே இருக்கும். மேலும் இது ஆரவல்லி மலையின் பாறைகளுக்கு நடுவில் உள்ளது.

இங்கு சிறுபான்மையராக இருக்கும் ஹிந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமயஞ்சார்ந்த இடமாக விளங்குகிறது இங்கிருக்கும் சிவன் கோவில். பஞ்ச பாண்டவர்கள் 14 வருடங்களுக்கு நாடு கடத்தப்பட்ட போது, ஒரு முறை இங்கு தங்கி நீர் பருகியதாக நம்பப்படுகிறது.

நுஹ்ஹிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த நேரம்

செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இங்கு வானிலை இனிமையுடன் இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

நுஹ்ஹுவை அடைவது எப்படி?

மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு இரயில் மற்றும் சாலை வழியாக நுஹ்ஹிலிருந்து செல்லலாம். நுஹ்ஹிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் குர்கானில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நுஹ் சிறப்பு

நுஹ் வானிலை

சிறந்த காலநிலை நுஹ்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நுஹ்

  • சாலை வழியாக
    டெல்லி, குர்கான் மற்றும் பத்வால் போன்ற ஊர்களில் இருந்து நுஹ்ஹிற்கு பேருந்து சேவைகள் உள்ளன. அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தினால் சிக்கனமாக நுஹ் வந்தடையலாம். இங்கிருந்து டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச நகரங்களுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நுஹ்ஹிற்கு அருகில் இருக்கும் இரயில் நிலையம் இங்கிருந்து 45 கி.மீ. தொலைவில் குர்கானில் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நுஹ்ஹிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் இங்கிருந்து 70 கி.மீ. தொலைவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue