ஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...

புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார் கருதப்படுகிறது. எஃகு தொழிற்சாலைகள் நிரம்ப இருப்பதால் ஹிசாருக்கு 'எஃகு நகரம்' என்ற இன்னொரு பெயரும் உண்டு. 

ஹிசாருக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹிசாரில் சுற்றுலாவுக்கு ஏற்ற பல இடங்கள் உள்ளன. 1860 டிசம்பரில் துவங்கி 1864 மே முதலாக நான்கு வருடங்கள், 4500ரூபாய் செலவில் கட்டப்பட்ட செயிண்ட் தாமஸ் தேவாலயம் இங்கு முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படுகிறது.

இயேசுவின் பன்ணிரண்டு சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் என்வருக்கு இத்தேவாலயம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் வடிவமும், கட்டுமானமும் விக்டோரிய மகாராணி காலத்திய பாணியை எடுத்துரைப்பதாக உள்ளது.

அக்ரோஹா அணை என்றும் அக்ரோஹா கோவில் அழைக்கப்படும் கோவில் வளாகம் அக்ரோஹா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஷக்தி சரோவர் என்ற மிகப்பெரிய குளமும், யோகா மூலம் நோய்களை குணப்படுத்தும் நேசுரோபதி என்ற இயற்கை மருத்துவமனையும் இங்கு உள்ளன.

லொஹரி ரகோ என்ற வரலாற்று பெருமை மிக்க கிராமம் ஹிசாருக்கு கிழக்கே 52 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூன்று மணல் திட்டுக்களில் தூப் சிங் மற்றும் சந்தர்பால் சிங் என்ற ஹரியானா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக அதிகாரிகளால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அவை சோதி சிஸ்வால் பீங்கான் காலத்தியவை என்று கண்டறியபட்டுள்ளது.

ஹிசாரில் இருந்து 1.5கிமீ தொலைவில் உள்ள அக்ரோஹா மணல் திட்டு தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற வரலாற்று தொன்மை மிக்க பொருட்கள் 3ஆம் அல்லது நான்காம் நூற்றாண்டில் இருந்து 13 அல்லது 14ஆம் நூற்றாண்டை வரையிலானவை என கருதப்படுகின்றன.

அக்ரோஹா தளம் ஒருபுறம் கோவில் வளாகத்தாலும் மற்றொரு புறம் ஷீலா மாதா கோவிலாலும் சூழப்பட்டுள்ளது.

ராகி ஷாபூர் என்றும் ராகி காஸ் என்றும் அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ராகிகார்ஹி கிராமம் ஹிசார் நகர அகழ்வாராய்ச்சியில் 1963ல் முதல்முறையும் 1997ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கிராமமாகும்.

2.2கிமீ சதுர பரப்பளவில் கொழித்த நகரமான இது, ஹரப்பா மற்றும் இந்து சமவெளி நாகரீகத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா பன்னீர் பாட்ஷா என்ற ஆன்மீக குருவின் கும்பாத் எனப்படும் கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சதுர வடிவில் நாலாபுறமும் வளைவு நுழைவாயில்களுடன் இச்சமாதி காணப்படுகிறது.    

ஹன்சி நகரத்திற்கு கிழக்கில் 26 கிமீ தொலைவில் உள்ள பார்சி நுழைவாயில் நகரத்தின் ஐந்து பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகும். டெல்லி நுழைவாயில், ஹிசார் நுழைவாயில், கோசைன் நுழைவாயில் மற்றும் உம்ரா நுழைவாயில் ஆகியவை மற்ற நான்கு. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜபுத்திர வீரர் பிரித்விராஜால் கட்டப்பட்ட ப்ரித்விராஜ் கோட்டையும் இங்குள்ளது.

நான்கு புகழ்பெற்ற சூஃபீ ஞானிகளின் கல்லறைகளைக் கொண்ட தர்கா சார் குதாப் எனப்படும் உயர்வேலைசமாதி வளாகம் இங்கு உள்ளது. ஜமால்-உத்-தீன் ஹன்சி, புர்ஹான்-உத்- தீன், குதாப்-உத்-தீன் மனுவார், நூர்-உத்-தீன் ஆகிய ஞானிகளின் கல்லறைகள் இவ்வளாகத்தில் உள்ளன.

இறுதியாக ஃபெரோஸ் ஷா துக்ளக் என்ற மன்னரால் கட்டப்பட்ட ஃபெரோஸ் ஷா மாளிகையைக் காணலாம். இம்மாளிகையினுள் மணல்கல் தூணால் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட லட் கி மஸ்ஜித் என்ற மசூதியும் உள்ளது.

வரலாறு

ஹிசார் நகரம் 1354ல் ஃபெரோஸ் கான் துக்ளக் என்பரால் ஹிசார்-ஈ-ஃபெரோசா என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

டெல்லி சுல்தானாக 1351ல் இருந்து 1388வரை ஆட்சி செய்த அவர் யமுனை நீரை டெல்லி நகரத்திற்கு கால்வாய்கள் வழியே கொண்டுவந்தவர் ஆவார். ஒருகாலத்தில் டெல்லி வழியே ஓடிய கக்கார் மற்றும் த்ர்ஷத்வதி ஆகிய நதிகள் இன்று வழித்தடம் மாறி ஓடுகின்றன.

காலஓட்டத்தில் 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மவுரிய வம்சம் முதல் 14ல் துக்ளக் வம்சம், 16ல் முகாலயர்கள், 19ல் ஆங்க்லேயர்கள் என பல ஆட்சிகளைக் கண்ட பழம்பெருமை வாய்ந்த நகரமாய் ஹிசார் திகழ்கிறது. சுதந்திரத்திற்குப் பின் பஞ்சாபின் ஒரு பகுதியாக மாறிய ஹிசார் 1966ல் பஞ்சாப் பிரிவினைக்குப் பின் ஹரியானாவின் பகுதியாக இருக்கிறது.  

ஹிசார் நகரை அடைவது எப்படி?

இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு ஹிசாரில் இருந்து விமான, ரயில், சாலை போக்குவரத்து வசதிகள் ஏராளம் உண்டு.

Please Wait while comments are loading...