நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!

நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல் 1976-ம் நாள் இந்த பகுதி தொடங்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் 'நொய்டா தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப தலைநகரம்!

உத்திரப் பிரதேச நகரத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவின், நிர்வாகத் தலைநகரம் அருகிலுள்ள நகரமான கிரேட்டர் நொய்டாவில் உள்ளது.

குர்கானுடன் சேர்ந்து நோய்டாவும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப துறை மையமாகவும் மற்றும் எல்லா பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்களையும் கொண்டுள்ள இடமாகவும் விளங்கி வருகிறது.

ஐபிஎம், மிராக்கிள், ஃபுஜிட்சு, ஏஓஎன் ஹெவிட், ஈபிக்ஸ், சிஎஸ்சி, ட்ரைபல் ப்யூஸன், ஃபைசர்வ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்.சி.எல், எரிக்ஸன், டெக் மஹிந்த்ரா, அடோப் மற்றும் டெல் ஆகியவை இங்குள்ள சில புகழ் பெற்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாகும்.

நொய்டா சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குவதால் பல்வேறு நிறுவனங்களும் நொய்டாவை தங்களுடைய தலைமையகமாக தேர்ந்தெடுக்கின்றன.

உண்மையில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை முன்னுக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் தலைமையகமும் நொய்டாவில் தான் உள்ளது.

சந்தீப் மார்வாவினால் உருவாக்கப்பட்டு, என்.டி.டி.வி, டி.வி.டுடே குழுமம், சி.என்.என்-ஐ.பி.என், ஜீ செய்திகள் மற்றும் சி.என்.பி.சி போன்ற இந்திவாயவின் முதன்மையான செய்தி நிறுவனங்கள் உள்ள இடமான ஃபிலிம் சிட்டி என்ற இடத்திற்காகவும் நோய்டா புகழ் பெற்றிருக்கிறது.

மேலும், மாநாடுகள் மற்றும் அலுவல் ரீதியானா சந்திப்புகள் ஆகியவை அதிகளவில் இங்கு நடத்தப்படுவதாலும், டெல்லியின் மிகப்பெரிய மாநாடுகள் மற்றும் தொழில் கண்காட்சிகள் நடத்தப்படும் இடமான இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட் (IECM) மற்றும் டெல்லி சர்வதேச எக்ஸ்போ மையம் ஆகியவையும் இங்குதான் உள்ளன.

டெல்லி மெட்ரோ இரயில் வழியாக மிகவும் நன்றாக இணைக்கப் பட்டுள்ள நோய்டாவில், கிரேட் இண்டியா பிளேஸ் போன்ற ஷாப்பிங் மற்றும் பல்லடுக்கு வியாபார மையங்களும் உள்ளன.

தொழில்கள் தொடர்பான சந்திப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கு மிகவும் ஏற்ற இடமாக நொய்டா விளங்குகிறது. IECM-ம் 400 அறைகளைக் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றை இங்கேயுள்ள நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

சுத்தத்தைப் பொறுத்தவரையில் 87-வது இடத்தில் இருக்கும் குர்கானை விட மிகவும் மேலே 17-வது இடத்தில் நொய்டா உள்ளது.

நொய்டாவைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

சமீப காலமாகவே ரியல் எஸ்டேட் துறையில் வியத்தகு வகையில் நொய்டா வளர்ச்சி பெற்றிருக்கிறது. இண்டர்நேஷனல் ரெக்ரியேஷன் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுனிடெக் லிமிடெட் நிறுவனங்களைச் சேர்ந்த 'வேர்ல்ட்ஸ் ஆஃப் ஒன்டர்' என்ற மதிப்பு மிக்க திட்டங்களும் கூட நொய்டாவில் நடந்து கொண்டுள்ளன.

வட இந்தியாவிலேயே மிகப்பெரிய பல்லடுக்கு வணிக மையமாக விளங்கும் தி கிரேட் இன்டியன் பிளேஸில் அனைத்து வகையான பிராண்டுகளும் கடை விரித்துள்ள இடமாகும். இது மட்டுமல்லாமல் வேறு சில பொழுது போக்கு மற்றும் பல்லடுக்கு மையங்களும்  (Multiplexes) நோய்டாவில் உள்ளன.

இப்படிப்பட்ட பெருமை மற்றும் கவர்ச்சியான அம்சங்களைக் கொண்ட இடங்கள் மட்டுமல்லாமல் சாய் பாபா கோவில், தாமரை (லோட்டஸ்) கோவில் மற்றும் ISKCON கோவில் ஆகியவையும் உள்ளன.

இந்த நகரத்திற்கு மிகவும் தேவையான அமைதியை தரும் இடமாக ஓக்லா பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. நோய்டாவில் உள்ள செக்டார் 18 மார்க்கெட் முக்கியமான ஷாப்பிங் மையமாக விளங்குகிறது.

நொய்டாவை அடையும் வழிகள்

நொய்டாவை விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்துகளின் மூலம் எளிதில் அடைய முடியும், நொய்டாவிற்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையம் மற்றும் விமான நிலையமாக டெல்லி உள்ளது.

Please Wait while comments are loading...