Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » ஈர்க்கும் இடங்கள் » தாமரை கோவில்

தாமரை கோவில், நொய்டா

17

1986-ம் ஆண்டில் பஹாய் இனத்தவரால் கட்டப்பட்டிருக்கும் தாமரை வடிவத்திலான இந்த கட்டிடக்கலை அதிசயம், நவீன இந்தியாவின் மற்றும் 20-ம் நூற்றாண்டின் தாஜ் மஹால் என்று கருதப்படுகிறது.

டெல்லியிலேயே மிகவும் சிறந்த மற்றும் பிரமிக்கத்தக்க கட்டிடமாக இருப்பதால் தான் இது ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. அதன் கட்டிடக் கலை வடிவமைப்பிற்காகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு சர்வதேச விருதுகளை இந்த கோவிலுக்கு அளித்துள்ளன.

பாதி திறந்திருக்கும் தாமரை மலரைப் போன்று கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் அமைதியும், தெய்வீகமும் கலந்திருக்கின்றன. பளிச்சிடும் வெண்மை நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த வழிபாட்டுத்தலத்தைச் சுற்றிலும், செயற்கையாக வடிவமைக்கப்பட்ட புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் நடைபாதைகள் போன்றவையும், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள தடுப்புகளும் உள்ளன. இந்த இடத்தில் படிகள் மற்றும் பாலங்களுடன் கூடிய ஒன்பது குளங்களும் உள்ளன.

இந்த கோவிலின் கீழ் தளத்தில் இந்த கோவிலிற்கான முதன்மையான வழிபாட்டு கூடம் உள்ளது. அதன் பக்கவாட்டுப் பகுதிகளில் வரவேற்பு மையம், நூலகம் மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியவை உள்ளன.

மணிக்கொருமுறை இந்த கோவிலைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒலி-ஒளி அறிமுக காட்சிகள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கான முன்னோடித் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

இந்த தாமரையின் மேற்பகுதி கண்ணாடியால மூடப்பட்டுள்ளதாகவும் மற்றும் மழை மற்றும் மோசமான பருவநிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக இரும்பினாலும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடியாலான மேற்பகுதியின் வழியாக இயற்கையாகவே ஒளி புகும் இடமாகவும் இந்த கோவில் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri