Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நொய்டா » ஈர்க்கும் இடங்கள் » ஓக்லா பறவைகள் சரணாலயம்

ஓக்லா பறவைகள் சரணாலயம், நொய்டா

17

சுமார் 3.5 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் ஓக்லா பறவைகள் சரணாலயம் உள்ளூர் மற்றும் இடம் பெயர்ந்த பறவைகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. நொய்டா-டெல்லியின் எல்லையில், யமுனை நதி உத்திரப் பிரதேசத்தை நோக்கி செல்லத் துவங்கும் இடத்தில் இந்த சரணாலயம் அமைக்கப் பட்டுள்ளது.

யமுனை நதியின் நீரை தேக்கி நிறுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள ஏரிதான் இந்த சரணாலயத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஏரி ஓக்லா கிராமத்திற்கு மேற்கிலும் மற்றும் கௌதம புத்தா நகருக்கும் கிழக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.

பறவையியல் ஆராய்ச்சியளார்களின் பதிவேடுகளின் படி, இந்த ஏரி 319 வகையான இடம் பெயரும் பறவைகளை ஈர்க்கும் இடமாகவும் மற்றும் இவற்றில் சுமார் 50% பறவைகள் திபெத், ஐரோப்பா மற்றும் சைபீரியா போன்ற இடங்களிலிருந்து வந்து, தங்களுடைய குளிர்காலத்தை இந்திய நாட்டின் இந்த பகுதியில் வெப்பத்துடன் கழிப்பதற்காக வருவதாகவும் குறிப்புகள் உள்ளன.

நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலத்தில் இங்கு வரும் இந்த பறவைகள், மார்ச் மாதத்தில் கோடைக்காலம் துவங்கும் வேளையில் தத்தமது தாயகங்களை நோக்கி மீண்டும் சிறகை விரிக்கின்றன.

1874-ம் ஆண்டில் ஆக்ரா கால்வாய் கட்டப்பட்டதிலிருந்தே பறவைகளை விரும்புபவர்களுக்குப் பிடித்தமான இடமாக ஓக்லா பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Jul,Fri
Check Out
01 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Jul,Fri
Return On
01 Aug,Sat