Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » சன்னிஹித் சரோவர்

சன்னிஹித் சரோவர், குருக்ஷேத்ரா

50

சன்னிஹித் சரோவர் எனும் இந்த இடம் ஏழு புனித சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் ஸ்தலமாக பெயர்பெற்றுள்ளது. ‘சன்னிஹித்’ எனும் ‘சேகரம்’ எனும் பொருளை உணர்த்துகிறது. 

ஏழு புனித ஆறுகளிலிருந்து நீர் இந்த தீர்த்தத்தில் சூரிய கிரகணம் மற்றும் அமாவாசையின்போது சங்கமிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. அமாவாசை தினங்களில் இந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான யோகம் கிட்டும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்தலத்தில் செய்யப்படும் சடங்குகள் மற்றும் மந்திரகோஷங்கள் போன்றவை முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி அளிக்கும் என்பதும் ஒரு ஐதீக நம்பிக்கை.

எனவே ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக இந்த தீர்த்தக்குளத்துக்கு விஜயம் செய்து பிண்டதானம் செய்கின்றனர். இங்கு வீற்றிருக்கும் விஷ்ணுக்கடவுளால் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவதாக கருதப்படுகிறது.

ஹனுமான், விஷ்ணு, துருவ் பஹத், துர்க்கை, லட்சுமி நாராயண் மற்றும் இதர தெய்வங்களுக்கான சிறு சன்னதிகள் இந்த சரோவர் தீர்த்தத்தை ஒட்டி அமைந்துள்ளன.

ஹிந்துக்கள் மட்டுமல்லாது சீக்கிய வகுப்பினராலும் இந்த சரோவர் ஸ்தலம் விஜயம் செய்யப்படுகிறது. குருக்ஷேத்ரா நகரத்தில் பல்வேறு குருத்வாராக்களும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon