Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » கல்பனா சாவ்லா கோளரங்கம்

கல்பனா சாவ்லா கோளரங்கம், குருக்ஷேத்ரா

50

இந்தியாவை பெருமைப்படவைத்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் பிறந்தவராவார். ஹரியானா மாநில அரசு இவரை கௌரவிக்கும் நோக்கத்துடன் அவரது பெயரில் கோளரங்கம் ஒன்றை அமைத்துள்ளது.

விண்வெளி ஓடத்தில் இதர அமெரிக்க வீரர்களுடன் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப்பிறகு இந்த நினைவுக்கோளரங்கம்  அமைக்கப்பட்டது. கல்பனா சாவ்லாவின் விண்வெளி சாதனைகள் குறித்த விபரங்களும் இந்த கோளரங்கத்திலுள்ள ஒரு பிரத்யேக பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதி நவீன ‘புரொஜக்டர் கருவிகள்’ மற்றும் ‘சரவுண்ட் சவுண்ட் சாதனங்கள்’ ஆகியவற்றோடு இந்த அரைக்கோள வடிவ அரங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. 12 மீட்டர் விட்டமுடைய இந்த கோளரங்கத்தில் ஒரே சமயத்தில் 120 பார்வையாளர்கள் ஒரு திசை நோக்கியவாறு அமர முடியும்.

முழுதும் குளிரூட்டப்பட்ட  இந்த அரங்கிற்கு தடையின்றி மின்சாரம் பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ‘அஸ்ட்ரனாட்’ மற்றும் ‘ஒயசிஸ் இன் ஸ்பேஸ்’ எனும் இரண்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்காகவும் முக்கியமாக மாணவர்களுக்காகவும் இந்த அரங்கில் காண்பிக்கப்படுகின்றன.

இந்த வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தின் காட்சிக்கூடங்களில் வானவியல் மற்றும் விண்வெளி குறித்த காட்சித்திரை-தொடுதிரை அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை மாணவர்கள் சுயமாக இயக்கி விபரங்களையும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். எ வாக் த்ரு இன் டைம், டே அன்ட் நைட், யுவர் வெயிட் ஆன் வேரியஸ் பிளானெட்ஸ், சீசன்ஸ் ஆன் எர்த், வேர்ல்டு டைம், அவர் அட்ரெஸ் இன் யுனிவர்ஸ், அவர் சோலார் சிஸ்டம், பியான்ட் சோலார் சிஸ்டம், அஸ்ட்ரோ க்விஸ் மற்றும் ஜோடியாக் க்விஸ் போன்றவை இந்த காட்சி அமைப்புகளின் பெயர்களாகும்.

இவை யாவுமே இளம் மனங்களுக்கு வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த தெளிவான அறிவை அளிக்கும் வகையில் நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவு டாக்டர் கல்பனா சாவ்லாவின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat