Search
  • Follow NativePlanet
Share

நவான்ஷாஹர் – பஞ்சாபில் ஓர் ஆன்மீக நகரம்!

26

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நவான்ஷாஹர் நகரம் மற்றும் மாவட்டப்பகுதி ஒரு பிரசித்தமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. இங்குள்ள இயற்கைக்காட்சிகள் மற்றும் வருடமுழுதும் நிலவும் இனிமையான பருவநிலை போன்றவற்றுக்காக இது சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் ஸ்தலமாக விளங்குகிறது. இப்பகுதியில் பாயும் சட்லெஜ் ஆறு இந்த பிரதேசத்தின் எழிலுக்கும் மண் வளத்துக்கும் காரணமாகவுள்ளது.

ஆதியில் நௌஸர் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்த நவான்ஷாஹர் நகரம் ஆப்கன் படைத்தளபதியான நௌஸர் கான் என்பவரால் அலாவுதீன் கில்ஜி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

2008-ம் ஆண்டில் பஞ்சாப் முதலமைச்சரான பிரகாஷ் சிங் பாதல் இந்த நகரத்தின் பெயரை ‘ஷாஹித் பகத் சிங் நகர்’ என்று அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளார்.

நவான்ஷாஹர் நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்

நவான்ஷாஹர் சுற்றுலா அம்சங்கள் யாவுமே இங்கு விஜயம் செய்து விட்டு திரும்பும் பயணிகளின் மனதில் இனிப்பான ஞாபகங்களாக பதிந்து போகும் அளவுக்கு விசேஷமானவையாக அமைந்துள்ளன.

இவற்றில் ஐந்து ஹவேலிகள் எனப்படும் கோட்டை மாளிகைகள் முக்கியமானவையாகும். இவை நௌஸர் கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கின்றன. நாட்டிலுள்ள மிகச்சிறந்த குருத்வாராக்களில் சிலவற்றையும் இந்த நகரம் தன்னுள் கொண்டுள்ளது.

குருத்வாரா நானக்சர், குருத்வாரா குர்பர்தாப், நவான்ஷாஹர் சனேஹி கோயில், நப் கன்வல், கிர்பால் சாஹர் மற்றும் குருத்வாரா குர்பலா (சொத்ரன்) ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இந்நகரத்திற்கு அருகிலெயே அமைந்துள்ள ஜலந்தர், லுதியானா, ஹோஷியார்பூர் மற்றும் சிம்லா போன்ற இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கும் பயணிகள் தங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்றாற்போன்று விஜயம் செய்யலாம்.

எப்படி செல்வது நவான்ஷாஹர் நகருக்கு?

அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் போதுமான அளவுக்கு போக்குவரத்து வசதிகள் நிரம்பியிருப்பது இந்த நகரத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக உள்ளது.

லூதியானாவில் உள்ள சஹ்னேவால் விமான நிலையம் நவான்ஷாஹருக்கு அருகில் அமைந்திருக்கிறது. அங்கிருந்து ஒரு மணி நேர பயணத்தில் நவான்ஷாஹர் நகருக்கு வந்து விடலாம்.

சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம்

நவான்ஷாஹர் நகரத்தின் பருவநிலையானது கடுமையான கோடைக்காலம், குளுமை மற்றும் ஈரப்பதம் நிரம்பிய மழைக்காலம் மற்றும் அதிக குளிர் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்கள் இந்நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ஏற்றவையாக உள்ளன.

நவான்ஷாஹர் சிறப்பு

நவான்ஷாஹர் வானிலை

சிறந்த காலநிலை நவான்ஷாஹர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நவான்ஷாஹர்

  • சாலை வழியாக
    நவான்ஷாஹர் நகரம் வழியே NH18 தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. எனவே அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் தனியார் மற்றும் பஞ்சாப் மாநில அரசுப்பேருந்து சேவைகளால் இந்நகரம் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்திற்கு வெளியே உள்ள பெருநகரங்களிலிருந்தும் இந்நகருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நவான்ஷாஹர் ரயில் நிலையம் இம்மாவட்டத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. எனவே நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் ரயில் மார்க்கமாக இந்த நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம். உள்ளூர் சுற்றுலா அம்சங்களை சுற்றிப்பார்ப்பதற்கு ஆட்டோ மற்றும் டாக்சி போன்ற போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நவான்ஷாஹர் நகரத்தில் நகரத்தில் விமான நிலையம் இல்லை. ஆனால் 59 கி.மீ தூரத்தில் லுதியானாவில் உள்ள சஹ்னேவால் விமான நிலையத்திலிருந்து இந்நகரத்திற்கு வரலாம். அங்கிருந்து சாலை மார்க்கமாக பேருந்து அல்லது டாக்சி மூலம் 40 நிமிடங்களில் இங்கு வந்து விடலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun