Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஃபதேஹ்கர் சாஹிப்

ஃபதேஹ்கர் சாஹிப் – வரலாற்று நகரம்!

26

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபதேஹ்கர் ஆழமான வரலாற்று பின்னணி நிரம்பிய ஒரு முக்கிய நகரமாகும். பஞ்சாப் பிரதேசத்தின் பாரம்பரிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ள இது சிக்கிய இனத்தார்க்கும் முஸ்லிம்களுக்கும் போர் நடைபெற்ற பூமியாகவும் அறியப்படுகிறது. இந்நகரத்தில் ஃபதேஹ்கர் சாஹிப் எனும் பிரசித்தமான சீக்கிய குருத்வாரா அமைந்திருக்கிறது.

குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்களான ஷாஹிப்ஸதா ஃபதேஹ் சிங் மற்றும் ஷாஹிப்ஸதா ஸொரோவர் சிங் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. மதம் மாற மறுத்த இந்த இருவரும் வாஸிர்கான் என்பவரால் செங்கல் சூளையில் உயிரோடு எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பல்வேறு வரலாற்றுப்பின்னணிகள்!

இங்கு இஸ்லாமியர்களை வீழ்த்தி சீக்கியர்கள் ஆட்சியை பிடித்ததால் இந்நகரம் அந்த வெற்றியை குறிக்கும் விதமாக 'வெற்றி நகரம்' என்ற பொருள்படும்படி அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் நான்கு நுழைவாயில்களை கொண்டுள்ளது. திவான் தோடர்மால், நவாப் ஷெர் முகமது கான், பாபா பண்டா சிங் பஹதூர் மற்றும் பாபா மோதி ராம் மேஹ்ரா என்ற பெயர்களில் அந்த நான்கு வாயில்களும் அழைக்கப்படுகின்றன.

மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சியளிக்கும் இந்த வாயில் அமைப்புகள் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் வீற்றிருக்கின்றன.

ஃபதேஹ்கர் சாஹிப் மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!

ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தில் சங்கோல், ஆம் காஸ் பாக், மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில் மற்றும் மிதக்கும் உணவகம் போன்றவை முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.

ஹோலி, துஷேரா, திவாளி மற்றும் பைசாகி போன்ற திருவிழாக்கள் இந்நகரத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர ஷாஹீதி ஜோர் மேளா எனும் முக்கியமான திருவிழா ஒன்று இந்நகரத்தில் வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இது சீக்கிய வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுபடுத்தும் விதத்தில் நடத்தப்படுகிறது. இந்த நகரத்துக்கு அருகிலேயே சிர்ஹிந்த் மற்றும் சங்கோல் எனும் இதர முக்கியமான சுற்றுலாத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

எப்படி செல்லலாம்?

ஃபதேஹ்கர் சாஹிப் நகரம் சண்டிகர் நகரத்திலிருந்து 42.4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சாலைமார்க்கமாக இந்த தூரத்தை 52 நிமிடங்களில் கடக்கலாம்.

இந்நகரத்திற்கான பிரத்யேக ரயில் நிலையமும் இங்கு அமைந்திருக்கிறது. சிர்ஹிந்த் ரயில் நிலையம் மூலமாகவும் பயணிகள் இந்நகரத்துக்கு வரலாம். இது ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது.

சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம்

ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தின் பருவநிலையானது பெரும்பாலான வட இந்திய நகரங்களின் பருவநிலை இயல்பை ஒத்ததாகவே காணப்படுகிறது.

கடுமையான கோடைக்காலம், குளுமை மற்றும் ஈரப்பதம் நிரம்பிய மழைக்காலம் மற்றும் குளிர் நிலவும் குளிர்காலம் ஆகியவற்றை இந்நகரம் கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்கள் சுற்றுலாவுக்கு ஏற்றவையாக உள்ளன.

ஃபதேஹ்கர் சாஹிப் சிறப்பு

ஃபதேஹ்கர் சாஹிப் வானிலை

ஃபதேஹ்கர் சாஹிப்
34oC / 92oF
 • Sunny
 • Wind: NE 10 km/h

சிறந்த காலநிலை ஃபதேஹ்கர் சாஹிப்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது ஃபதேஹ்கர் சாஹிப்

 • சாலை வழியாக
  ஷெர் ஷா சுரீ மார்க் அல்லது NH1 தேசிய நெடுஞ்சாலை சிர்ஹிந்த் நகரம் வழியே செல்கிறது. அங்கிருந்து 6 நிமிட பயண தூரத்திலேயே இந்த ஃபதேஹ்கர் சாஹிப் நகரம் அமைந்திருப்பதால் நாட்டின் பல பகுதிகளுடன் சாலை போக்குவரத்து வசதிகள் மூலம் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து இங்கு வருவதற்கு தனியார் மற்றும் பஞ்சாப் மாநில அரசுப்பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. டெல்லி விமான நிலையத்திலிருந்தே டாக்சிகள் மூலமும் இங்கு வரலாம்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. அது தவிர இந்நகரத்துக்கு அருகிலேயே உள்ள முக்கிய ரயில் நிலையமாக 2.7 கி.மீ தூரத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையம் உள்ளது. இவை தவிர ஃபதேஹ்கர் சாஹிப் என்ற பெயரில் மற்றொரு ரயில் நிலையமும் சிர்ஹிந்த்-நங்கால் ரயில் பாதையில் உள்ளது. அம்ரித்ஸர் ஷதாப்தி மற்றும் அம்ரித்ஸர்-நியூ டெல்லி எக்ஸ்பிரஸ் மற்றும் சட்டிஸ்கர் எக்ஸ்பிரஸ் போன்றவை சிர்ஹிந்த் ஜங்ஷன் வழியாக செல்கின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தில் விமான நிலையம் இல்லை. ஆனால் அம்ரித்ஸர் மற்றும் சண்டிகர் நகரத்தில் உள்ள விமான நிலையங்களிலிருந்து இந்நகரத்திற்கு வரலாம். சண்டிகர் இங்கிருந்து 42.4 கி.மீ தூரத்தில் உள்ளது. பேருந்து அல்லது டாக்சி மூலமாக அம்ரித்ஸர் 52 நிமிடங்களிலும் இங்கு வந்து விடலாம். அம்ரித்ஸர் நகரம் 215 கி.மீ தூரத்திலும் உள்ளது. இங்கிருந்து 3.5 மணி நேர பயணத்தில் இங்கு வந்து சேரலாம். எல்லாவற்றுக்கும் மேலாக டெல்லி மாநகரிலிருந்து நான்கரை மணி நேர பயணத்தில் இங்கு வர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Jan,Sat
Return On
26 Jan,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Jan,Sat
Check Out
26 Jan,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Jan,Sat
Return On
26 Jan,Sun
 • Today
  Fatehgarh Sahib
  34 OC
  92 OF
  UV Index: 9
  Sunny
 • Tomorrow
  Fatehgarh Sahib
  30 OC
  86 OF
  UV Index: 9
  Partly cloudy
 • Day After
  Fatehgarh Sahib
  29 OC
  85 OF
  UV Index: 9
  Partly cloudy