Search
 • Follow NativePlanet
Share

மான்சா -  சிறிய நிலத்தில் அமைதியான பயணம்!

8

பிரபலமாக 'வெள்ளை தங்கப் பகுதி' என்று அறியப்படும்  மான்சா, கிழக்கு பஞ்சாப் பகுதியில்  பர்னாலா-ஸர்துல்கர்-சிர்சா சாலையில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் கைத்ஹால் சீக்கிய இராச்சியத்தின் அங்கமாக விளங்குவதற்கு முன்னர் இது ப்ஹுல்கிய சீக்கிய வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இதன் கலாச்சார வேர்கள் சிந்து சமவெளி மற்றும் ஹரப்பா நாகரிகம் வரை பரவியுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (ASI) இங்குள்ள கிராமங்களில் இருந்து ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ எச்சங்களை கண்டுபிடித்துள்ளது.

புவியியல், பண்பாடு மற்றும் பாரம்பரியம்!

மான்சா நகரம், பதிந்தா மாவட்டத்துடனும் (வடமேற்கு) , ஸங்கூர் மாவட்டத்துடனும் (வடக்கு கிழக்கு), தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது.  ஹரியானா மாநிலம் மான்சா நகரத்தின் தெற்கு பக்கத்தில் உள்ளது.

இந்த நகரத்திற்கு பாய் குர்தாஸ் அவர்கள் அடிக்கல் நாட்டியதாக நம்பப்படுகிறது. அவருடைய நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இங்கு ஒரு விழா நடைபெறுகின்றது.

அப்பொழுது அங்கு வரும் பக்தர்கள் அவருடைய சமாதியில் லட்டு மற்றும் வெல்லம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு  ஹோலி, தீபாவளி, தசரா, பைசாகி மற்றும் பிற விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

பைசாகி திருவிழா பொதுவாக ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று கொண்டாடப்படும். அன்று விவசாயிகள் நல்ல அறுவடை தந்த கடவுளுக்கு நன்றி தெரிவிப்பார்கள். மேலும் அவர்கள் வருங்காலத்தில் நல்ல அறுவடை கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்வார்கள்.

இது பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் வளமான பகுதியில் அமைந்துள்ளதால், மான்சா 'வெள்ளை தங்கப் பகுதி' என்று அழைக்கப்படுகிறது. எனவே, இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கின்றது.

இங்கு பருத்தி முக்கியப் பயிராக விளைவிக்கப்படுகின்றது. மான்சா சுற்றுலாவானது பயணிகளூக்கு இனிமையான மற்றும் விருந்தோம்பும் உள்ளூர் பயணத்தை அறிமுகப்படுத்துகிறது.

இங்குள்ள சாலையோர தாபாக்களில் பஞ்சாப்பின்  உண்மையான மற்றும் பாரம்பரிய உணவு  வகைகளை உண்டு மகிழலாம். இங்குள்ள தாபாக்களைத்  தவிர நகரத்தின் உள்ளே ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன.

மான்சா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

மான்சாவில் பயணிகள் சுற்றி பார்க்க விரும்பும்  பல்வேறு சுற்றுலா  இடங்கள் உள்ளன. எனவே  மான்சாவை சுற்றிப் பார்ப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

மான்சாவில் உள்ள ப்ஹிக்ஹி மற்றும் பரிதா மற்றும் மான்சாவிற்கு அருகில் உள்ள புதலாடா, டாலெல்வால  மற்றும் ஸர்துல்கர் போன்ற இடங்கள் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது.

மான்சாவை எவ்வாறு அடைவது?

மான்சா அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் மூலம் மாநில தலைநகரான சண்டிகர் மற்றும் புது தில்லியில் இருந்து நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் வடக்கு ரயில்வேயின்  டெல்லி-பதிந்தா தடத்தில் அமைந்துள்ளதால், இந்த நகரத்திற்கு நேரடியாக டெல்லியில்  இருந்து பல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், இந்த நகரத்திற்கான  பேருந்து சேவைகள் பல முக்கிய நகரங்களில் இருந்து கிடைக்கிறது. இந்த நகரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் லூதியானா விமான நிலையம் ஆகும். இது மான்சாவில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ளது.

மான்சா சுற்றுலாவிற்கான சிறந்த பருவம்

மான்சா நகரம் வெப்பம் மற்றும் தூசி நிறைந்த துணை வெப்பமண்டல காலநிலையை அனுபவிக்கிறது. இது மிகக் குறைந்த அளவு பருவமழையைப் பெறுகின்றது. மேலும் இங்கு பருவ மழைக் கால அளவு மிகவும் குறைவாகும்.

அத்துடன் பருவமழைக் காலத்தில் இங்கு ஈரப்பதம் மிகுந்து காணப்படும். ஆகவே மான்சா சுற்றுலாவிற்கு பருவமழைக்கு பிந்தய பருவமே  (அக்டோபர் மற்றும் நவம்பர்) மிகவும் சிறந்தது.

இந்தப் பருவத்தில் இங்கு குளிர்ந்த வானிலை நிலவுகின்றது. மேலும் இந்தப் பருவத்தில் குறைந்த வெப்பநிலை மற்றும் குளிர் காற்று வீசுவதால் இதுவே சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும்.

மான்சா சிறப்பு

மான்சா வானிலை

மான்சா
33oC / 92oF
 • Sunny
 • Wind: NE 9 km/h

சிறந்த காலநிலை மான்சா

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது மான்சா

 • சாலை வழியாக
  மான்சா பஞ்சாப்பின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில போக்குவரத்து பஸ் ஆபரேட்டர்கள் பர்னாலா-ஸர்துல்கர்-சிர்சா நெடுஞ்சாலையில் தினசரி பஸ் சேவைகளை வழங்குகின்றார்கள்.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பதிந்தா-ஜிந்த்-டெல்லி ரயில் பாதையில் மான்சா நகரம் அமைந்துள்ளது. எனவே மன்சாவிற்கு புது டெல்லியில் இருந்து அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு பெரிய பயணிகள் ரயில்களான டெல்லி-பதிந்தா நகரங்களுக்கிடையே எக்ஸ்பிரஸ், பெரோஸ்பூர் மும்பை ஜன்டா எக்ஸ்பிரஸ், பிகானீர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் பஞ்சாப் மெயில் போன்ற அனைத்து ரயில்களும் மான்சாவில் நின்று செல்கின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  மான்சாவிற்கு மிக அருகில் லூதியானாவின் ஸஹ்னெவால் விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து மிக எளிதாக ஒரு பஸ் அல்லது டாக்சி மூலம் மான்சாவை அடையலாம். சாலைமூலம் லூதியானாவில் இருந்து மான்சாவை அடைய சுமார் 2 மணி 9 நிமிடங்கள் ஆகும். இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ ஏர்வேஸ் போன்ற அனைத்து பெரிய உள்நாட்டு விமான நிறுவனங்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஸஹ்னெவால் விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்குகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Jan,Tue
Return On
29 Jan,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
28 Jan,Tue
Check Out
29 Jan,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
28 Jan,Tue
Return On
29 Jan,Wed
 • Today
  Mansa
  33 OC
  92 OF
  UV Index: 9
  Sunny
 • Tomorrow
  Mansa
  31 OC
  88 OF
  UV Index: 9
  Partly cloudy
 • Day After
  Mansa
  31 OC
  89 OF
  UV Index: 9
  Partly cloudy