Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேஹ்கர் சாஹிப் » வானிலை

ஃபதேஹ்கர் சாஹிப் வானிலை

எனவே அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரையான மாதங்கள் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பயணிகள் அசௌகரியம் ஏதுமின்றி வெளிச்சுற்றுலாவில் ஈடுபடலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : இங்கு ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. ஃபதேஹ்கர் சாஹிப் நகரம் கோடைக்காலத்தில் 45°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. கடும் உஷ்ணம் நிலவுவதால் கோடைக்காலத்தில் இங்கு வருகை தரும் பயணிகள் குடைகள் மற்றும் குளுகோஸ் நீர் போன்றவற்றுடன் பயணிப்பது சிறந்தது.  

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் வரை) : ஃபதேஹ்கர் சாஹிப் நகரம் உபவெப்ப மண்டல மழைப்பருவத்தை பெறுகிறது. இது கோடைக்காலத்தின் வெப்பத்தை வெகுவாக தணிக்கிறது. வெப்பநிலை குறைந்து காணப்பட்டாலும் சூழலில் ஈரப்பதம் சற்று அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்தில் நவம்பர் மாதம் துவங்கி பிபரவரி இறுதி வரை இங்கு குளிர் அதிகமாக காணப்படுகிறது.  இக்காலத்தில் சில சமயம் 4°C  வரையிலும் வெப்பநிலை குறையக்கூடும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில்  1°C  வரையிலும் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.  குளிர்காலத்தில் இந்த நகருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் குளிர் தாங்கும் உடைகளோடு பயணிப்பது சிறந்தது.