மொஹாலி (அஜித்கார்ஹ்)  - பஞ்சாபின் தகவல் தொழிற்நுட்ப மற்றும் வணிக மையம்!

அஜித்கார்ஹ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பஞ்சாபில் உள்ள மொஹாலி, சண்டிகரின் துணை நகரமாகும். சண்டிகார் மூநகரங்கள் என்றழைக்கப்படும் சண்டிகர் மற்றும் பன்சகுலா ஆகிய நகரங்களோடு மொஹாலியும் ஒன்றாகும். SAS நகர் என, சாஹிப்ஜாதா அஜித் சிங் என்ற குரு கோவிந்த் சிங்கின் மூத்த மகனின் நினைவாக இவ்வூர் அழைக்கப்படுகிறது.  

பஞ்சாப் தனிமாநிலம் ஆனபின் உருவான மொஹாலி ரூப்நகர் மாவட்டத்தின் பகுதியாக 2006 வரை இருந்தது. பிறகு அபார வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த ஊர்,டெல், பிலிப்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

மொஹாலி அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

மொஹாலி கிரிக்கெட் மைதானம், சுக்னா ஏரி, ராக் பூங்கா, சத்பீர் வனவிலங்கு பூங்கா, சுக்னா வனவிலங்கு சரணாலயம், ரோஸ் பூங்கா, பக்ரா நங்கல் அணை என சுற்றுலாவிற்கு ஏற்ற பல இடங்கள் இங்கு உண்டு.

அதுமட்டுமல்லாது சுருத்வாரா ஆம் சாஹிப், குருத்வாரா நதா சாஹிப், மானசா தேவி கோவில் என பலவகை மத தளங்களும் உண்டு.

மொஹாலி அடைய வழிகள்

விமான, ரயில் வழியாக மொஹாலியை சுலபமாக அடையலாம். பேருந்து வசதியும் சிறப்பான முறையில் உண்டு.  

மொஹாலி வானிலை

மித வெப்பமண்டலமான மொஹாலியில் வெப்பமான கோடைகாலமும், மிதமான குளிருடன் கூடிய குளிர்காலமும் நிலவுகிறது. மழைக்காலத்தில் கணிக்க முடியாமல் மழை பெய்வதால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இங்கு பயணிக்கலாம்.

Please Wait while comments are loading...