Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» குர்தாஸ்பூர்

குர்தாஸ்பூர் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம்!

18

இந்த நகரை 17-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த குரியா ஜீ என்பவரில் பேராலேயே இந்நகர் அழைக்கப்படுகிறது. சட்லஜ் மற்றும் ரவி நதிகளுக்கிடையே உள்ள இந்நகரத்தின் மக்கள் பெரும்பாலும் பஞ்சாபியே பேசினாலும் அலுவல்களுக்கு இந்தியும், ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் கலாச்சாரத்தை உணர்த்தும் வண்ணம் குருத்வாராக்கள், பாங்க்ரா நடனங்கள், டர்பன், பஞ்சாபி உணவு என இந்நகரில் அனைத்தும் உள்ளது.   

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

டெரா பாபா நாக், குருதாஸ் நங்கள், மஹாகாளேஷ்வர் கோவில், மதோபூர், ஷாபூர் கண்டி கோட்டை, மீன் பூங்கா, அசாலேஷ்வர் கோவில், குருத்வாரா சோலா சாஹிப், தடா சாஹிப் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. குரு அர்ஜூன் தேவ் மந்திரம் ஓதிய இடமான கிர்தான் அஸ்தான் இங்கு உள்ளது. மேலும் டல்ஹசி, தர்மசாலா, மெக்லியோட்கஞ் என அருகிலேயே பல சுற்றுலா ஊர்களும் உள்ளன.

விழாக்களும், நிகழ்ச்சிகளும்!

சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் சுற்றுலாத் துறையே பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. குரு நானக்கின் திருமணநாள் நிகழ்வு, பைசாகி, லோஹ்ரி, பபெஹலி சிஞ் என்னும் மல்யுத்த விழா மற்றும் சிவராத்ரி விழா என குருதாஸ்பூர் விழாக்கோலம் பூணுகிறது..

குருதாஸ்பூர் அடைய வழி

பஞ்சாப் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களுடன் சாலை போக்குவரத்து சிறப்பாக உள்ளதால் பயணிக்க சுலபமாக உள்ளது. ஜலந்தர், படாலா, டல்ஹசி, பட்னிடாப் ஆகிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உண்டு.

பயணிக்க சிறந்த பருவம்

கோடை, மழை, குளிர் என மூன்று பருவங்கள் நிலவும் குருதாஸ்பூருக்கு மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும், அதாவது அக்டோபர் முதல் மார்ச் வரை செல்வதே சிறந்ததாகக் கருதப்படுகிறது

குர்தாஸ்பூர் சிறப்பு

குர்தாஸ்பூர் வானிலை

சிறந்த காலநிலை குர்தாஸ்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குர்தாஸ்பூர்

  • சாலை வழியாக
    தனியார் மற்றும் பொது பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் 15ன் மூலம் கண்ட்லாவுடன் குருதாஸ்பூர் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சண்டிகர், ஜைபூர், டெல்லி ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    குருதாஸ்பூரில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ள பதான்கோட்டில் இருந்து பல ஊர்களுக்கு ரயில்வழி தொடர்புள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராஜா சான்ஸி விமானநிலையம் 89 கிமீ தொலைவில் அம்ரிஸ்டரில் உள்ளது. இங்கிருந்து பேருந்து மற்றும் தனியார் கார் மூலம் இலக்கை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon