ஃபரித்கோட்  - ஒரு அரசமுறைப் பயணம்!

ஃபரித்கோட் தென் மேற்கு பஞ்சாபில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். முதலாவதாக 1972-ம் ஆண்டில் பதிந்தா மற்றும் பிரோஸ்பூர் மாவட்டங்களில் வெளியே உருவாக்கப்பட்டது. இந்த நகரம் சூஃபி ஞானியான பாபா ஷேக் ஃபரிதுத்தீன் கஞ்ஸ்ஹகர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். மேலும் இங்கு அழகிய குருத்வாராக்கள் மற்றும் கோட்டைகள் உள்ளதால் இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

ஃபரித்கோட் மற்றும் அதனைச்சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

ஃபரித்கோட் சுற்றுலா நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இங்குள்ள பல்வேறு விதத்திலான அற்புதமான கோட்டைகள் மற்றும் அழகிய குருத்வாராக்கள் ஒன்றிணைந்து சுற்றுலா பயணிகளை கவருகின்றது.

இங்குள்ள  ராஜ் மஹால், ஃபேரி காட்டேஜ், கிலா முபாரக் மற்றும் குருத்வாரா, டிலா பாபா ஃபரித்  போன்றவை புகழ்பெற்ற சுற்றுலா தளங்களாக உள்ளன. வரலாற்று ஆர்வலர்கள் இத்தகைய இடங்களுக்கு வருகை தருவதன் மூலம் அதன் வளமான பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெறும் ஃபரித் மேளா நாட்டின் பல்வேறு பகுகிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இந்த மேளா ஃபரித்கோட் மாவட்ட கலாச்சார சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

ஃபரித்கோட்டை எவ்வாறு அடைவது?

ஃபரித்கோட்டிற்கு அருகில் அமிர்தசரஸ் விமான நிலையம் சுமார் 128 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ரயில்கள் மற்றும் பஸ்களை பயன்படுத்தி ஃபரித்கோட்டை மிக எளிதாக அடையலாம்.

ஃபரித்கோட் சுற்றுலாவிற்கான சிறந்த நேரம்

அக்டோபர் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட பருவமே ஃபரித்கோட் சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும்.

Please Wait while comments are loading...