Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நவான்ஷாஹர் » வானிலை

நவான்ஷாஹர் வானிலை

அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரையான மாதங்கள் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த மாதங்களில் உள்ளூர் திருவிழாக்கள் போன்ற கொண்டாட்டங்களும் அதிகமாக நடைபெறுவதால்  அவற்றையும் பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் மாதம் வரை நீடிக்கிறது. நவான்ஷாஹர் நகரம் கோடைக்காலத்தில் அதிகபட்சம் 45°C குறைந்தபட்சம் 32°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. வறட்சியுடன் காணப்படும் கோடைக்காலத்தில் புழுதிக்காற்றுகளும் அடிக்கடி வீசக்கூடும்.  

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இது கோடைக்காலத்தில் நிலவிய வெப்பத்தை வெகுவாக தணிக்கிறது. மழைக்காலத்தின் 70 சதவீத மழைப்பொழிவை ஜூலை மாதத்திலேயே இப்பகுதி பெற்றுவிடுகிறது

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : நவான்ஷாஹர் நகரத்தில் அக்டோபர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. 12°C  வெப்பநிலையில் துவங்கி 20°C  வரை இக்காலத்தில் வெப்பநிலை நிலவுகிறது. ஜனவரியில் 6°C  அளவிற்கு வெப்பநிலை குறைவதால் அம்மாதத்தில் இங்கு குளிர் அதிகமாக இருக்கும்.