Search
  • Follow NativePlanet
Share

தோடா - இயற்கையோடு பிணைந்திருக்கும் அழகு!

13

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 1107 மீ உயரத்தில் தோடா மாவட்டம் அமைந்துள்ளது. 1948-ம் ஆண்டு உத்தம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்ட அந்தஸ்தை இம்மாவட்டம் பெற்றது. தற்போதைய பாகிஸ்தானில் இருக்கும் முல்தான் பகுதியைச் சேர்ந்த பாத்திரம் செய்யும் தொழில் புரிந்த தீடா என்பவரின் பெயரால் இந்நகரத்திற்கு தோடா என்ற பெயர் பெற்றது.

இயற்கையின் மத்தியில் அமைந்துள்ள மிகச் சரியான சுற்றுலா தலமான தோடாவில் படேர்வா, சிந்தா பள்ளத்தாக்கு, சியோஜ் பசும் புல்வெளிகள் மற்றும் பால் பாத்ரி ஆகியவை மற்றும் பல கண்கவர் சுற்றுலாப் பார்வையிடங்கள் உள்ளன. ஒவ்வொரு வருடத்தின் ஆகஸ்ட் மாதங்களிலும் நடக்கும் கைலாஷ் புனித யாத்திரைக்காக இந்துக்களால் மிகவும் முக்கிய தலமாமான படேர்வா கருதப்படுகிறது.

படேர்வாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்தில் அடர்த்தியான மற்றும் கண்கவரும் ஊசியிலை காடுகளை கொண்ட சுற்றுலா தலமாக சிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.

இதே பகுதயில் இருக்கும் சியோஜ் பசும் புல்வெளிப் பகுதிகள் 'படேர்வாவின் கிரீடத்தில் உள்ள வைரம்' என்ற வர்ணணைக்கு சொந்தமான இடமாகும். இந்த பசும் புல்வெளிகளைச் சுற்றிலும் பெரிய பனி படர்ந்த மலைகள் உள்ளன.

வெளியுலகத்தால் நன்கு அறியப்பட்ட சில கோவில்களை கொண்டுள்ள இடமாக தோடா விளங்குகிறது. இவற்றில் குப்த கங்கா கோவில், ஷீட்லா மாதா கோவில், ஆலாபனி கோவில் மற்றும் நக்னி மாதா கோவில் ஆகியவை பிரபலமான மத வழிபாட்டுத் தலங்களாகும். சுபர் நாக் கோவில், துபு நாக் கோவில் மற்றும் வாசுகி நாக் கோவில் ஆகியவை படேர்வாவின் புகழ் பெற்ற கோவில்களாகும்.

இந்த சுற்றுலா தலத்தை அனைத்து வகையான முதன்மையான போக்குவரத்து வசதிகளின் வழியாகவும் எளிதில் அடைந்து விட முடியும். 231 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீ நகர் விமான நிலையம் தோடவிற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாகும்.

இந்த விமான தளம் மும்பை மற்றும் டெல்லியுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்விமான தளத்திற்கு வெளியிலேயே சுற்றுலாப் பயணிகள் வாடகை கார்களை அமர்த்திக் கொண்டு தோடாவிற்கு பயணத்தை தொடர முடியும்.

220 கிமீ தொலைவிலிருக்கும் ஸ்ரீ நகர் இரயில் நிலையம் தோடாவிற்கு அருகிலிருக்கும் இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் இந்திய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளும், பிற சொகுசு பேருந்துகளும் ஸ்ரீ நகரிலிருந்து தோடாவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

தோடாவில் வருடம் முழுவதுமே நல்ல குளுமையான பருவநிலையே நிலவி வருகிறது. சுற்றுலா சென்று ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும் மார்ச் முதல் நவம்பர் மாதங்களில் தோடாவிற்கு வரலாம். குளிர்காலங்களில் இங்கு பனிப்பொழிவு சகஜமானது.

தோடா சிறப்பு

தோடா வானிலை

சிறந்த காலநிலை தோடா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தோடா

  • சாலை வழியாக
    தோடா நகரம் ஜம்மு மற்றும் ஸ்ரீ நகருக்கு தொடர்ச்சியான பேருந்து வசதிகளைப் பெற்றுள்ள இடமாகும். ஜம்மு காஷ்மீர் சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகள் இவற்றில் சற்றே நன்றாக இருக்கும். சுற்றுலா பயணிகள் ஜம்முவிலிருந்து சிறப்பு சொகுசுப் பேருந்துகளிலும் தோடாவிற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சுமார் 220 கிமீ தொலைவில் இருக்கும் ஸ்ரீ நகர் இரயில் நிலையம் தோடாவிற்கு மிகவும் அருகில் இருக்கும் இரயில் சந்திப்பாகும். இந்த இரயில் நிலையம் இந்தியாவின் பிற நகரங்களுடன் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த இரயில் நிலையத்திற்கு வெளியிலேயே தோடா செல்ல வாடகை கார்கைள அமர்த்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    231 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஷேக் ஆலம் விமான நிலையம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ நகர் விமான நிலையம் தோடாவிற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் மும்பை, சிம்லா, சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகள் 729 கிமீ தொலைவில் உள்ள டெலிலி விமான நிலையத்திற்கு வந்து, பின்னர் அங்கிருந்து ஸ்ரீ நகருக்கு விமானம் மூலம் வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri