பாக் ஈ பஹு, ஜம்மு

பாக் ஈ பஹு ஒரு அழகிய தோட்டம், இது பிரபலமான பஹு கோட்டையின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பரந்து விரிந்த தோட்டத்தில், பல வகையான மரங்கள், பூக்கள், மற்றும் புதர்கள் வளர்ந்து காணப்படுகின்றன.

ஒரு சிறிய உணவு விடுதி பாக் ஈ பஹு வின் ஒரு மூலையில் திறக்கப்பட்டது. இந்த அம்சங்கள் மூலம், இந்த தோட்டம், பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத்தளமாக செயல்படுகிறது.

சமீபத்தில், ஒரு மீன் பண்ணை மற்றும் விழிப்புணர்வு மையம் பாக் ஈ பஹு வில் நிறுவப்பட்டன. 220 மீட்டர் நீளம் கொண்ட, இந்த புதிதாக சேர்க்கப்பட்ட மீன் பண்ணை இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி மீன் பண்ணையாக அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...