பீர் கோ குகை கோவில், ஜம்மு

பீர் கோ குகை கோவில் அல்லது ஜாம்வந்த் குகை கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோவில் தாவி ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ளது. அழிக்கும் இந்து கடவுள் சிவனுக்கு அர்பணிக்கபட்டுள்ள இந்த கோவில் சுயம்பு சிவலிங்கம் உறையும் இடமாக அமைந்துள்ளது.

இப்பிராந்தியத்தின் தொன்மையான கோவிலாக அறியப்படும் பீர் கோ குகை கோவில் அகேசியா காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள மற்ற யாத்திரை தலங்கள் மற்றும் குகைகளுக்கு ஒரு நுழைவாயிலாக இக்கோவில் செயல்படுகிறது என்று உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர்.

சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாக கொண்டாடப்படுகிற “சிவராத்திரி” திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். பஞ்சபக்தர் கோவில், ரன்பீரேஸ்வர் கோவில் மற்றும் ஆப் சம்பு கோவில் முதலியவை பீர் கோ குகை கோவிலுக்கு அருகாமையிலுள்ள மற்ற கோவில்களாகும்.

Please Wait while comments are loading...