வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு

வைஷ்ணவ தேவி கோவில், இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று. இது ஒரு கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து மத தாய் கடவுள் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு குகை கோவில். குகையின் நீளம் சுமார் 30 மீட்டரும், உயரம் 1.5 மீட்டரும் கொண்டது.

பிரபலமான நாட்டுப்புற கதையின்படி, இந்த குகை தாய் தேவியானவள் ஒரு அரக்கனுக்கு பயந்து ஒளிந்துகொள்வதற்கு இந்த குகையை பயன்படுத்திகொண்டதாகவும் பின்னர் அவள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோவிலின் முக்கிய ஈர்ப்பானது வைஷ்ணவ தேவியின் மூன்று அவதாரங்களை, சித்தரிக்கும் சிலைகள் உள்ளன; அதாவது மகாகாளி, நேரம் மற்றும் இறப்பின் இந்து கடவுள், மகா சரஸ்வதி, இந்துக்களின் அறிவு கடவுள் மற்றும் மகாலட்சுமி, இந்துக்களின் செல்வம் மற்றும் அதிர்ட்ஷ்ட கடவுள்.

ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியத்திற்கு இந்த கோவில் பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் இருந்து சுமார் 8 மில்லியன் பக்தர்கள் வருடந்தோறும் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

இந்த எண்ணிக்கையானது ஆந்திர பிரதேசத்தின் திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தப்படியாக நாட்டின் இரண்டாவது மிக பெரிய அளவில் பக்தர்கள் விஜயம் செய்யும் கோவில் என்ற பெருமையை பெருகிறது.

வைஷ்ணவ தேவி கோவிலை ஆராய்ந்து பார்க்க ஆர்வம் கொண்டுள்ள தனிநபர்கள் மலையேற்றம் செய்து கோவிலை அடைய வேண்டும்.

Please Wait while comments are loading...