முபாரக் மண்டி அரண்மனை, ஜம்மு

முன்னாள் டோக்ரா மன்னர்களின் அரச உறைவிடமான முபாரக் மண்டி அரண்மனை சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ்பெற்றதாகும். இந்த அரண்மனை ஐரோப்பிய, பரோக், ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலை பாணிகளின் ஒரு தனிப்பட்ட கலவையை வெளிப்படுத்துகிறது.

இந்த அரண்மனையின் பிரதம ஈர்ப்பு ஷீஸ் மஹால் வளாகமாகும். முபாரக் மண்டி அரண்மனையின் 'பிங்க் மண்டபத்தில்' அமைந்துள்ள டோக்ரா கலை அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட அரங்குகள் மற்றும் அரண்மனையின் காலரிகள் பல்வேறு அதிகாரபூர்வமான நிகழ்வுகள் மற்றும் சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. அழகிய தோட்டத்தினால் சூழப்பட்ட அரசவர்க்கத்தினராலும், பொது ஜனங்களாலும் பயன்படுத்தப்பட்ட முற்றம், பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அரண்மனை பழைய நகரத்தையும் தாவி ஆற்றின் காட்சியையும் கண் முன் நிறுத்துகிறது. முபாரக் மண்டி அரண்மனை ஒரு வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கபட்டு இங்கு அரசின் நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

Please Wait while comments are loading...