நந்தினி விலங்குகள் சரணாலயம், ஜம்மு

முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்மு » ஈர்க்கும் இடங்கள் » நந்தினி விலங்குகள் சரணாலயம்

நந்தினி விலங்குகள் சரணாலயம் ஜம்முவில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம். இந்த சரணாலயத்தின் பெயர் நந்தினி கிராமத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கிறது.

நந்தினி விலங்குகள் சரணாலயம் 34 சதுர கி.மீ. பரப்பளவில் மீது பரந்து விரிந்துள்ளது. இந்த சரணாலயத்தில் அழிவில் விளிம்பில் உள்ள மற்றும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கின இனங்களுக்கு இருப்பிடமாக அமைந்துள்ளது.

இந்த இடம் முதலில் பறவைகள் சரணாலயமாக இருந்தது. அதன் ஃபீசன்ட் பறவை எண்ணிக்கைக்காக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டது. ஃபீசன்ட் பறவை இனங்களை தவிர்த்து சுற்றுலா பயணிகள் சிவப்பு காட்டுக்கோழி, நீல பாறை புறா, இந்திய மைனா, சாக்கோர், மயில் மற்றும் ஒரு சில பறவை இனங்களை கண்டு களிக்க முடியும்.

இந்த சரணாலயத்டில் உள்ள பறவைகளை பார்க்க விரும்பும் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள், ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள ராம் நகர் வனவிலங்கு வார்டன் மூலம் வழங்கப்படும் வன சுற்றுலா அனுமதியை பெற வேண்டும். மார்ச் முதல் மே வரை இங்கே பயணம் செய்து பறவைகளை பார்த்து ரசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கணக்கெடுப்பின் படி, இந்த வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 8 பாலூட்டி இனங்கள் உள்ளன. காட்டுப்பன்றி, கோரல், சிறுத்தை, சாம்பல் நிற குரங்குகள், மற்றும் ரீசஸ் குரங்கு முதலியவை இந்த சரணாலயத்தில் உள்ள முக்கிய இனங்களாகும்.

நந்தினி விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளை பார்வையிட சிறந்த நேரம் செப்டம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலமாகும்.

Please Wait while comments are loading...