சர்னிசார் ஏரி, ஜம்மு

ஜம்மு அருகே அமைந்துள்ளது சர்னிசார் ஏரி, இதன் பின்னணியில் அடர்ந்த காடுகள் கொண்ட மலைப்பாங்கான நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரி, கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கிறது. அப்போது இது சீசன் முழுவதும் பூக்கும் தாமரை மலர்களால் மூடப்பட்டு காணப்படும்.

இந்து மத இதிகாசங்களின்படி, சர்னிசார் ஏரியின் தோற்றம் பெரிய இந்திய காவியமான, மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அர்ஜூனனுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது. புராண வீரரான, அர்ஜுனா, எய்ததாக கூறப்படும் அம்பு மான்சர் மண்ணில் இரண்டு ஏரிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அதாவது அர்ஜூனனின் அம்பு வீழ்ந்த இடம் மன்சார் ஏரியாகவும், அர்ஜூனன் அம்பெய்த இடம் சர்னிசார் ஏரியாகவும் உருவானது. சர்னிசார் ஏரியை பார்க்க திட்டமிடும் சுற்றுலா பயணிகளுக்கு ஜம்மு & காஷ்மீர் சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன.

Please Wait while comments are loading...