தன்பாத்- இந்தியாவின் நிலக்கரி தலைநகர்!

ஜார்கண்டின் புகழ்பெற்ற நகரமான தன்பாத், இந்தியாவின் வளமான நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டிருப்பதால் 'இந்தியாவின் நிலக்கரி தலைநகர்', என்றழைக்கப்படுகிறது.

மேற்கே பொகாரோ மற்றும் கிரித் மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ள இந்நகரம் வடக்கே டும்கா மாவட்டத்தாலும், கிழக்கு, தெற்கில் புருலியா மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. தாமோதர் நதி, கோபாய், இர்ஜி, குடியா ஆகிய நதிகள் இந்நகரின் வழியே ஓடுகின்றன.

சமூக கலாச்சார, தொழில்வளம் மற்றும் கல்வி நிலையங்கள் தன்பாத்தின் புகழை பரப்பும் வண்ணம் அமைந்துள்ளன. 100850ஏக்கர் அளவில் இந்நகரம் குன்றுகளையும், 56456ஏக்கர் காடுகளையும் கொண்டுள்ளது தன்பாத். இந்நகரில் தென்படும் சிகப்புமண் விவசாயத்திற்கு பயன்படாததால் இங்குள்ள மக்கள் மீன்வளர்ப்பிலும், பட்டுப்புழு வளர்ப்பிலும் ஈடுபடுகிறார்கள்.

தன்பாத் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

தன்பாதில் நிலக்கரி சுரங்கள் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர்களைக் காண்பது ஈடில்லா அனுபவமாக இருக்கிறது.

மேலும் துர்கை அம்மனை பிரதான கடவுளாகக் கொண்ட சக்தி மந்திர், அகந்த் ஜோதி என்ற வைஷ்ணோ தேவி கோவில், சிதிலமடைந்த துர்கை, சிவன், கணேசர் மற்றும் நந்தி சிலைகள் உள்ள டால்மி கோவிலும் ஆகியனவும் இங்கு உள்ளன. ஜைன, புத்த மதங்களின் மிச்சங்களும் இக்கோவிலில் காணக்கிடைக்கின்றன.

பரகர் நதிக்கரையில் உள்ள மைத்தான் அணை இங்கு முக்கியமான சுற்றுலா தளமாகும். அதிக அளவில் நீர்மின்சாரம் இங்கு தயாரிக்கப்படுகிறது.

சரக் பதார், கோலாபூர், சடி கோபிந்த்பூர், மேவா, ஜிஞ்சிபஹரி, சார்க் குர்த், பன்ரா, கல்யாணேஷ்வரி கோவில், டாப்சான்சி ஏரி, பதிந்தா நீர்வீழ்ச்சி, பஞ்சத் அணை ஆகிய இடங்களும் சுற்றுலா தளங்களாக விளங்குகின்றன. மத்திய சுரங்க ஆராய்ச்சி பணிமனை, மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய சுரங்கப் பள்ளி ஆகியனவௌம் இங்கு உள்ளன.   

பயணிக்கும் வழிகள்

விமானம், ரயில், சாலை என சகல போக்குவரத்து வசதிகளும் தன்பாத்தில் நிறைந்திருக்கின்றன. கொல்கட்டா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளது. அதுமட்டுமின்றி தனியார் கார்கள், ரிக்‌ஷாக்கள் வசதிகளும் உண்டு.

வானிலை

வருடம் முழுதும் வறண்ட வானிலையே நிலவும் தன்பாத்தின் குளிர்காலம் ஓரளவிற்கு மிதமாக இருக்கிறது.

Please Wait while comments are loading...