Search
  • Follow NativePlanet
Share

புருலியா - இயற்கையும், காட்டுயிர் வாழ்க்கையும்!

22

மேற்கு வங்காளத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரம் புருலியா. மேற்கு வங்காளத்தில் கொட்டும் அருவிகளுடன் வன விலங்குகள் வாழும் பச்சை பசுமையாய் விளங்கும் காடுகளில் ஒன்று தான் இந்த இடம்.

இங்குள்ள கசாக்பட்டி மற்றும் பஞ்செட் நீர்த் தேக்கங்கள் தான் புருலியாவின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. மேலும் புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடங்களாகவும் விளங்குகின்றன.

இங்குள்ள மற்றொரு சிறிய நீர்த்தேக்கமான சாஹேப் பந்த்தில் படகு சவாரி செய்து மீன் பிடித்தலிலும் ஈடுபடலாம். இங்குள்ள பறவைகளில் பக்கி பஹர் என்ற பறவை இனம் குறிப்பிடத்தக்கது.

இது மலைகளின் பறவை என்று வர்ணிக்கப்படுகிறது. இவ்வகை பறவைகள் மலைகளில் உள்ள பாறைகளால் ஈர்க்கப்படும். அதனாலேயே இம்மலை இப்பெயரை பெற்றது.

புருலியா மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

புருலியாவில் இருக்கும் பல சுற்றுலா தலங்களை விட இங்கு கங்சபடி அணைக்கு அருகில் இருக்கும் மான் பூங்கா மற்றும் அஜோத்யா மலைகள் தான் புருலியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்கி வருகின்றன. இந்த நகரத்தின் காட்சி பரப்பை காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

ஷ்யாம் ராய் கோவில் மற்றும் பிஹாரிநாத் மலை போன்ற இதர ஈர்ப்புகளும் புருலியாவில் உள்ளன. ஜாய்சந்தி பஹர் என்ற மற்றொரு இடம் மலை பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இதுவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கும்.

திருவிழாக்கள்

புருலியாவில் துர்கா பூஜை மற்றும் காளி பூஜைகளின் போது தான் திருவிழா கொண்டாட்டம் தடபுடலாக இருக்கும். தீபாவளியின் போது ஒட்டு மொத்த நகரமும் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

இங்குள்ள சந்தல் பழங்குடியினர் பந்தனா என்ற திருவிழாவை கொண்டாடுவார்கள். நடனம், இசை மற்றும் அசைவ உணவு விருந்து என இந்த திருவிழா கோலாகலமாக இருக்கும். சில நேரம் உள்ளூர்வாசிகள் ஹடியா எனப்படும் நாட்டு மதுவை அருந்துவதும் உண்டு.

இங்க நகரத்தை சுற்றி பார்க்க அதிக சிரமமில்லாத போது கூட சுற்றுலாப் பயணிகளிடம் சொந்த வாகனம் இருந்தால் வசதியாக இருக்கும். இங்குள்ள சில ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். மேலும் அவர்களே சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனமும் ஏற்பாடு செய்து கொடுப்பதுண்டு.

புருலியாவை அடைவது எப்படி?

புருலியாவில் சாலை மற்றும் இரயில் இணைப்பு வசதிகள் நன்றாக உள்ளன. இங்கிருந்து மேற்கு வங்காளத்தின் முக்கிய நகரங்களுக்கு சுலபமாக செல்லலாம்.

புருலியாவை சுற்றிப் பார்க்க சிறந்த காலம்

குளிர் காலத்தில் புருலியாவிற்கு சுற்றுலா வருவது தான் சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

புருலியா சிறப்பு

புருலியா வானிலை

சிறந்த காலநிலை புருலியா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது புருலியா

  • சாலை வழியாக
    புருலியாவிற்கு சாலை வழியாக வர வேண்டுமானால், கொல்கத்தாவிலிருந்து மாநில நெடுஞ்சாலை 2 வழியாக வரலாம். அங்கிருந்து 247 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புருலியா.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    புருலியாவிலேயே ஒரு இரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன. அதிக தூரம் பயணம் செய்யும் சில இரயில்கள் இந்த இரயில் நிலையத்தை கடந்து செல்லும். இங்கு வருவதற்கு கரக்பூர் இரயில் நிலையத்தையும் பயன்படுத்தலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    புருலியாவிற்கு மிகவும் அருகில் இருக்கும் விமான நிலையம் கொல்கத்தாவில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed