Search
  • Follow NativePlanet
Share

பீர்பூம் -  சிவப்பு மண் பிரதேசம்!

9

பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. சுடுமண் சிற்ப அமைப்புகளை இம்மாவட்டத்தின் நகரங்களில் அதிகமாக காணலாம்.

உள்ளூர் தொழில் அம்சங்கள்

இந்த மாவட்டத்தின் முக்கியமான தொழில் விவசாயமாக உள்ளதால் 75 சதவீத மக்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். பீர்பும் செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் பரந்து காணப்படும் வயல்வெளிகளை பார்த்து ரசிக்கலாம்.

காய்கறிகள் மற்றும் தானியங்களை மொத்த விலைக்கு வாங்கவும் செய்யலாம். சுடுமண் கலைப்பொருட்கள் மற்றும் உலோகச்சிற்பங்கள் போன்ற குடிசைத்தொழில் தயாரிப்புகளையும் ஞாபகார்த்தமாக இப்பகுதியில் வாங்கலாம்.

பீர்பூம் மாவட்டத்திலுள்ள சுற்றுலா அம்சங்கள்

பிரசித்தமான பௌஷ் மேளா எனும் திருவிழா பீர்பூம் மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. தாராபீத் எனும் ஆன்மிக ஸ்தலம் மற்றும் பக்ரேஷ்வர் எனும் இடத்திலுள்ள வெந்நீர் ஊற்று மற்றும் துப்ராஜ்பூர் எனும் கோயில் நகரம் போன்றவை இம்மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

பீர்பூம் மாவட்ட காட்டுயிர் வளம்

பல்லாப்பூர் எனும் காட்டுயிர் சரணாலயம் இப்பகுதியில் அமைந்துள்ளது. இதில் நரி, குள்ள நரி, புள்ளி மான், கருப்பு மான் மற்றும் பலவகை பறவைகள் ஆகியவை வசிக்கின்றன. புறாக்கள், சிலவகை புலம்பெயர் பறவைகள், வித்தியாசமான கிளி இனங்கள் போன்றவற்றை இந்த சரணாலயத்தில் காணலாம்.

விளையாட்டு மற்றும் உள்ளூர் பயண வசதிகள்

தங்குலி எனும் உள்ளூர் விளையாட்டு இப்பகுதியில் பிரபல்யமாக உள்ளது. பந்து மற்றும் குச்சியை பயன்படுத்தி இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.

பயணிகள் பீர்பூம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்ய நல்ல போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன. பேருந்துகள், வாடகை வாகனங்கள் மற்றும் உள்ளூர் ரிக்ஷாக்கள் போன்றவற்றை பயணிகள் பயன்படுத்தலாம்.

பீர்பூம் சிறப்பு

பீர்பூம் வானிலை

சிறந்த காலநிலை பீர்பூம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பீர்பூம்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை2 B மற்றும் 2 ஆகியவை கொல்கத்தாவிலிருந்து பீர்பூம் மாவட்டத்தை இணைக்கின்றன. இங்கிருந்து 99 கி.மீ தூரத்தில் முர்ஷிதாபாத் நகரம் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொல்கத்தா ரயில் நிலையம் பீர்பூம் மாவட்டத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் ரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கத்தா நகரத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் பீர்பூம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பேருந்துகள் மற்றும் இதர சாலைப்போக்குவரத்து மூலம் இங்கிருந்து வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue