Search
 • Follow NativePlanet
Share

பொகரோ - தொழில் துறை நகரம்!

22

1991-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொகரோ மாவட்டம், அதே ஆண்டில் அமையப்பெற்ற ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 210 மீட்டர் உயரத்தில், பொகரோ ச்ஹ்ஹொடங்புர் பீடபூமியில் அமைந்துள்ளது. இந்த நகரம் முக்கியமான பள்ளத்தாக்குகள் மற்றும் நீரோடைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

பொகரோ இந்தியாவில் அதிக தொழில் வளம் கொண்ட மண்டலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2011 மக்கள் தொகை கணக்கெடுக்கின்படி பொகரோவில் சுமார் 2 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.

பொகரோவின் மிக முக்கிய அம்சம் அதனுடைய எஃகு தொழிற்சாலை ஆகும். இது ஆசியாவிலேயே மிகவும் பெரியதாகும். இதனைத் தவிர இங்கு நன்கு அறியப்பட்ட பொகரோ இந்திய ஸ்டீல் ஆணையம், பாரத் ரெஃப்ரக்டரிஸ்  லிமிடெட்,  இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமானம், தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் போன்ற பல்வேறு முக்கிய நிறுவனங்களின் மையங்கள் உள்ளன. அதைவிட பொகரோவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதனுடைய மக்களுக்கு தரமான கல்வியை வழங்குகின்றன.

பொகரோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் பல்வேறு முக்கியமான சுற்றுலாத் தலங்கள் பொகரோவில் அமைந்துள்ளன. அவற்றுள், பொகரோ எஃகு தொழிற்சாலை மிகவும் புகழ்பெற்றது. 

அதை தவிர்த்து இங்கு கண்ணுக்கினிய காட்சிகளை வழங்கும் கர்கா அணை உள்ளது. இந்த அணையில் இருந்துதான் பொகரா தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் கிடைக்கின்றது.

இதனை தவிர்த்து பொகரோ இஸ்பத் புஸ்தகாலயா என்கிற நூலகம், ஜவகர்லால் நேரு உயிரியல் பூங்கா, புபுன்கி ஆசிரமம், ச்ஹஸ், சிட்டி சென்டர், ராம் மந்திர், சிட்டி பார்க், பொகரோ வெப்ப மின் நிலையம்போன்றவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றன.

பொகரோ வானிலை

கண்ணுக்கினிய அழகிய காட்சிகளை கொண்டுள்ள இந்த நகரானது மிகச் சரியாக தாமோதர் நதியின் தென் கரையில் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரத்தில் பரஸ்நாத் மலை மற்றும் கங்கை நதியும் உள்ளன.

மேலும் இந்த நகரத்திற்கு மிக அருகில் ஸத்தன்பூர் மலைத்தொடர்களும் உள்ளன. எனவே இந்த நகரம் இரண்டு விதமான தீவர காலநிலைகளை அனுபவிக்கின்றது. இந்த நகரத்தின் கோடைகால அதிக பட்ச வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்ஸியஸ் வரை செல்கின்றது.

கோடைகாலத்தில் இந்த நகரத்தின் வெப்ப நிலை சுமார் 2 டிகிரி செல்ஸியஸ் வரை குளிர்ந்து விடுகின்றது. பொகரோவிற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இதன் பருவ காலங்களை மனதில் நிறுத்தி தங்களுடைய பயணத்தை திட்டமிடுவது மிகவும் நல்லது.

இங்கு குளிர்காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கின்றது. கோடைகாலம் பிப்ரவரி முதல் மே வரை நீழ்கின்றது. இங்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை பரவி உள்ளது.

பொகரோவை எவ்வாறு அடைவது?

பொகரோ நகரம் நாட்டின் முக்கிய பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிக எளிதாக இந்த நகரத்தை அடையலாம்.

இந்த நகரம் கொல்கத்தா, துர்க், கோயம்புத்தூர், டெல்லி, சென்னை, ஹைதெராபாத், மும்பை, லக்னோ, கவுகாத்தி, அமிர்தசரஸ், பாட்னா, வாரணாசி, விசாகப்பட்டினம் போன்ற நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நகரத்தில் உள்ள ரயில் நிலையம், நகர மையதில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடிக்கடி இயக்கப்படுகின்றன.

மேலும் பார்வையாளர்கள் பேருந்துகள் மூலம் பொகரோவை எளிதாக அடைய முடியும். பொகரோவின் மிக முக்கியமான பேருந்து முனையம் நயா மொர் ஆகும். இதனை தவிர்த்து மேலும் இரண்டு பேருந்து முனையங்கள் உள்ளன. அவற்றில் முதலாவது பாஸந்தி  துறையிலும், மற்றொன்று  தர்மஸாலா ச்ஹாஸிலும் இருக்கிறது.

பொகரோ சிறப்பு

பொகரோ வானிலை

சிறந்த காலநிலை பொகரோ

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது பொகரோ

 • சாலை வழியாக
  பொகரோ அரசு பேருந்துகள் மூலம் அனைத்து நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பொகரோ ரயில்வே லைன் மூலம் அதைச் சுற்றி உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  பொகரோவிற்கு அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் கொல்கத்தா விமான நிலையம் (336 கிமீ) ஆகும். இந்த நகரத்திற்கு அருகே உள்ள உள்நாட்டு விமான நிலையம் ராஞ்சி விமான நிலையம் ஆகும். இது பொகரோவில் இருந்து சுமார் 105 கி.மீ தொலைவில் உள்ளது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Jun,Wed
Return On
17 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
16 Jun,Wed
Check Out
17 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
16 Jun,Wed
Return On
17 Jun,Thu