Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஸாஹிப்கஞ்ச்

ஸாஹிப்கஞ்ச் - எழில் கொஞ்சும் நகரம்!

4

ஜார்கண்ட் மாநில நிர்வாக தலைமையகமான ஸாஹிப்கஞ்ச், அந்த மாநிலத்தின் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1983-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி உருவாக்கப்பட்டது. இது ஸந்தால் பர்கானஸ் மாவட்டத்தில் இருந்து ஸாஹிப்கஞ்ச் ராஜ்மஹால் மற்றும் பகுர் சந்தால் துணைப் பிரிவுகளை பிரித்ததன் விளைவாக உருவாக்கப்பட்டது என வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்றைய ஸாஹிப்கஞ்ச் முகலாய ஆட்சியில் வங்க சுபஹ் ஆட்சியின் கீழ் இருந்தது.

ஸாஹிப்கஞ்ச் பல்வேறு மூச்சடைக்க வைக்கும் பசுமை காட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இங்கு பெரும் எண்ணிக்கையிலான பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மையான நிலங்கள் மிகவும் செழிப்பான விளை நிலங்களாகும். இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் மழைநீரின் உதவியால் பர்பாட்டி மற்றும் மக்காச்சோளத்தை விளைவிக்கின்றனர். ஸாஹிப்கஞ்சில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் பாஹாரிஸ் மற்று ஸந்தல்ஸ் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

புவியியல் அமைப்பு!

ஸாஹிப்கஞ்சின் புவியியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அதனை இரண்டு முக்கியமான இயற்கை பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி டாமின்-ஐ-கோ என அழைக்கப்படுகின்றது.

இந்தப் பகுதி காடுகள், மலைகள் மற்றும் மலைச் சரிவுகள் நிறைந்து காணப்படுகின்றது. மேலும்  இந்த பகுதியில் போரியோ, மான்ட்ரோ, பர்ஹைத், பத்ஹ்ன மற்றும் டல்ஜ்ஹரி போன்ற தொகுதிகளும் அடங்கி உள்ளன.

அதே நேரத்தில் இரண்டாவது பகுதியானது உயர் நிலங்கள் , முகடுகள், பள்ளத்தாக்குகள் போன்றவற்றின் தொகுப்பாக காட்சியளிக்கின்றது. இந்த இரண்டாவது இயற்கை தொகுதியில் ஸாஹிப்கஞ்ச், ராஜ்மஹால், உத்வா, மற்றும் பர்ஹர்வா போன்ற தொகுதிகள் காணப்படுகின்றன. மேலும், இந்தப் பகுதிகளில் கங்கை, குமானி, மற்றும் பன்ஸ்லோய் போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடுகின்றன.

ஸாஹிப்கஞ்ச் பகுதியில் அடந்த வனங்கள் காணப்பட்டாலும், மரம் வெட்டுதல் நடவடிக்கை காரணமாக வனங்களின் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றது. வனத்துறை அதிகாரிகள் மீண்டும் இந்தப் பகுதியில் காடு வளர்க்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இங்கு சல் மரம் நிறைந்து காணப்பட்டாலும், சல் மரங்களைத் தவிர்த்து, பலா மரம், முர்கா, சிம்லா, மூங்கில், ஸத்ஸல், மற்றும் தேக்கு போன்ற மரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

உற்பத்தியாளர்கள் இங்கிருந்து சல், ஸிமல் கட்டைகள், மற்றும் பலாப்பழங்களை பக்கத்து மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றார்கள். இவற்றைத் தவிர இங்கு கால்நடைகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

இவற்றை தவிர ஸாஹிப்கஞ்சின் கங்கை நதிப் படுக்கையில் ரேகு, கட்லா, மிர்கா, மற்றும் பர்ஹைட்  பொன்ற மீன் வகைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன.

பண்பாடு!

ஸாஹிப்கஞ்ச் வளமையான பண்பாட்டு சிறப்பை கொண்டுள்ளது. ஜார்கண்டின் இந்தப் பகுதியில் வசிக்கும் ஸன்தால்ஸ் மற்றும் பஹரியா இன மக்கள் பல்வேறு குடிசை தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பட்டுக் கூடு வளர்ப்பு, கொல்லர் பட்டறை, தச்சு, கைத்தறி நெசவு, கயிறு தயாரித்தல், பீடி தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் மற்றும் கல் வேலை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இங்கு சிறிய அளவிலான குவாரி தொழில் மற்றும் சுரங்கத் தொழிலும் நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிக முக்கியமான வர்த்தக மையமாக விளங்குவதால் இங்கு மொத்த விலை தானிய விற்பனை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த மாவட்டம் ஆளி விதை, சாக்கு பைகள், புகையிலை, கச்சா பருத்தி, சர்க்கரை, மண்ணெண்ணை, கோல் பருப்பு, கோதுமை, மக்காச்சோளம் போன்றவற்றை இறக்குமதி செய்கின்றது. மேலும் இந்த மாவட்டத்தில் இருந்து நெல், கோளம், ஸவாய்,  புல், கல் சில்லுகள், போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஸாஹிப்கஞ்ச் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

ஸாஹிப்கஞ்ச்சில் உள்ள பல்வேறு அழகான இயற்கைக்  காட்சிகள் கண்டிப்பாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும். இங்குள்ள கனஹிய ஸ்தன், ராஜ்மஹால், ஜமி மசூதி மற்றும் சிவன் கோவில் போன்ற இடங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன.

மேலும், இங்குள்ள உத்வா ஏரி, உத்வா பறவைகள் சரணாலயம், பின்துதாம் மற்றும் மேகி மேளா போன்றவை கண்ணுக்கினிய காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்குகின்றன.  

ஸாஹிப்கஞ்சை எவ்வாறு அடைவது ?

ஸாஹிப்கஞ்ச் நகரம் பார்வையாளர்கள் மிக எளிதில் அணுகும் வண்ணம் சாலை, ரயில் மற்றும் விமானம் மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

ஸாஹிப்கஞ்ச் வானிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடைகாலத்தில் வெப்பமான மற்றும் வறண்ட வானிலையும், குளிர்காலத்தில் மிகவும் குளிர்ந்த காலநிலையும் நிலவுகின்றது. எனவே இங்கு கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை பார்க்க முடியும்.

ஸாஹிப்கஞ்ச் சிறப்பு

ஸாஹிப்கஞ்ச் வானிலை

சிறந்த காலநிலை ஸாஹிப்கஞ்ச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸாஹிப்கஞ்ச்

  • சாலை வழியாக
    ஸாஹிப்கஞ்ச் நல்ல தரத்திலான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கங்கை நதியை படகு மூலம் கடந்த பிறகு, இங்கிருந்து ஜம்த்ரா-தும்கா- ஸாஹிப்கஞ்ச் சாலை மூலம் அசாமை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தற்போது ஸாஹிப்கஞ்ச், கொல்கத்தா, பார்மர், வாரணாசி, ராஜ்கிர், திப்ருகார், டெல்லி மற்றும் கவுஹாத்தி போன்ற நகரங்களில் இருந்து ரயில்வே லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸாஹிப்கஞ்ச்சிற்கு மிக அருகில் ராஞ்சி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் நாட்டின் பிற முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்றவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed