Search
  • Follow NativePlanet
Share

முங்கர் - ஆனந்தம் அள்ளித்தரும் பயணம்!

29

பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல் மற்றும் ஆன்மாவை நெகிழச்செய்யும் அதி அற்புதங்களாகும்.

1762 ஆம் வருடத்தில் காசிம் அலி கானின் ஆட்சிக்காலத்தின் போது வங்காளத்தின் தலைநகராக விளங்கிய முங்கர் நகரம், சரித்திர காலம் தொட்டே அதன் இருப்பை உணரச் செய்து வருகிறது.

முங்கர் நகரம் குறிப்பிடத்தக்க பெருமைகள் பலவற்றைப் பெற்றுள்ளது. முதலாம் உலகப்போரின் போது, வெடிமருந்துள்ள தோட்டாக்களைக் கொண்ட துப்பாக்கிகளை உற்பத்தி செய்தது, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன யுத்தத்தின் போது இங்குள்ள துப்பாக்கித் தொழிற்சாலை மிக முக்கியமான பங்கு வகித்தது போன்ற சுவாரஸ்யமான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டது முங்கர்.

கங்கை நதியோரத்தில் அமைந்துள்ள இதன் நில அமைப்பு, அதனை அற்புதமான இயற்கை அழகுடன் மிளிரச் செய்கிறது. இந்நகரத்தின் அருகாமையில் அமைந்துள்ள புண்ணிய படித்துறைகள் இதன் வசீகரமான தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

முங்கர் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

முங்கர் சுற்றுலாவின் பிரதான காட்சியகங்கள் முங்கர் கோட்டை, பீஹாரின் யோகா பாடசாலை, சீதா கந்த், கராக்பூர் ஏரி, பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம், பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம், ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, ஷா முஸ்தஃபா சூஃபியின் கல்லறை மற்றும் தில்வார்பூர் ஆகியவை ஆகும்.

அதீத வரலாற்று வளங்கள் மற்றும் ஆன்மீகத் திருத்தலங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள முங்கர்,  கண்டு களித்து அனுபவிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஸ்தலமாகும்.               

ஒரு சிறு குன்றின் மேல் கட்டப்பட்டு, இடைநிலை காலத்திலிருந்தே மிகப் பிரம்மாண்ட கட்டுமானத்துடன் தோற்றமளிக்கும் முங்கர் கோட்டை போன்ற சிறப்பம்சங்களை கொண்டு விளங்கும் முங்கர் சுற்றுலா, ஆர்வமிக்க பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

உலகெங்கிலும் யோகாக் கலைக்கு மிகப் பிரபலமாக விளங்கும் பீஹாரின் யோகா பாடசாலை, பெருந்திரளான மக்களை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

யோகாக் கலையின் மூலம் ஒரு மனிதனின் ஆளுமையை மேம்படுத்துவதே இந்த பாடசாலையின் முக்கிய இலக்காகும். சீதா கந்த், கராக்பூர் ஏரி, பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம் மற்றும் ராமேஷ்வர் கந்த் போன்றவை இங்கு உள்ள ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களாகும்.       

முங்கர், இரும்பு மற்றும் இரும்பினால் செய்யப்படும் பொருள்களில் காணப்படும் சிறப்பான வேலைத்திறன் போன்றவற்றுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். சத் பூஜா, துர்கா பூஜா, ரக்க்ஷா பந்தன் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் முங்கர் சுற்றுலாவை அலங்கரிக்கக்கூடிய சில திருவிழாக்கள் ஆகும்.

முங்கர் செல்ல ஏதுவான காலகட்டம்

முங்கர், கோடைகாலங்களின் போது வெப்பமான வறண்ட வானிலையுடனும், குளிர்காலங்களின் போது உறைய வைக்கும் குளிருடனும் காணப்படும். இங்கு மழைக்காலங்கள் ஓரளவு சாதகமான வானிலையுடன் காணப்படும், அதனால் இங்கு பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற காலம் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டமே ஆகும்.

முங்கரை அடைவது எப்படி?

இந்நகரம் சாலைகள், இரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

முங்கர் சிறப்பு

முங்கர் வானிலை

சிறந்த காலநிலை முங்கர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது முங்கர்

  • சாலை வழியாக
    முங்கர், தேசிய நெடுஞ்சாலை 80 மற்றும் பல்வேறு இதர மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பகல்பூர், பெகுசராய் மற்றும் பாட்னா ஆகியவற்றுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நீங்கள் இரயில் மூலம் செல்ல விரும்பினால், அருகாமையில் உள்ள இரயில் நிலையமான ஹௌரா-தில்லி வழித்தடத்தில், சாஹிப்கஞ்ச் வளைவில் உள்ள ஜமால்பூர் மற்றும் பகல்பூர் நிலையத்தை உபயோகித்துக் கொள்ளலாம். நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நிலையம் இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களையும் இணைப்பதாகத் திகழ்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முங்கருக்கு அருகாமையில் உள்ளதான பாட்னா விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு அருகாமையில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையமே ஆகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat