Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முங்கர் » ஈர்க்கும் இடங்கள் » பீஹாரின் யோகா பாடசாலை

பீஹாரின் யோகா பாடசாலை, முங்கர்

29

பீஹாரின் யோகா பாடசாலை, சுவாமி சத்யானந்தா அவர்களால் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. இப்பாடசாலை அதன் யோகா பயிற்சிக்கு உலகெங்கிலும் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இந்த பாடசாலை, யோகா கற்றுத் தருவதோடு மனித ஆளுமை மேம்பாட்டில் யோகாவின் முக்கியத்துவத்தையும் கற்பித்து வருகிறது. கங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த அழகிய பாடசாலை, ஜாதி, மதம், தேசம் போன்ற தடைகள் ஏதுமின்றி உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலிருந்தும் ஏராளமான மாணவர்களை இருகை நீட்டி வரவேற்கக்கூடியதாகத் திகழ்கிறது.

இந்த யோகா பயிற்சியின் முக்கியமான அம்சம் யாதெனில் இது மனித வாழ்க்கையின் பிரதான அங்கங்களான உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றிற்கிடையே ஒரு நேர்த்தியான சமன்பாட்டை உருவாக்குகிறது என்பது தான்.

யோகாவின் நற்பயன்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டுள்ளன; ஆகவே இந்த பாடசாலையின் முக்கிய குறிக்கோள் யோகா பாடங்களை, பீஹாரின் யோகா பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ள உன்னிப்பான பிரத்யேக வழிமுறைகள் மூலம் ஆழமாகக் கற்றுத் தருவதே ஆகும்.

இம்முறைகள் பீஹாருக்கு மட்டுமேயானவையாக வரையறுக்கப்படவில்லை; இவை பல்வேறு கல்லூரிகள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த பாடசாலை வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளில் மேற்கொள்ளப்படும் யோகா தொடர்பான செயற்திட்டங்களிலும் வழிகாட்டி வருகின்றது.          

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri