India
Search
 • Follow NativePlanet
Share

சிலிகுரி - பனிபடர்ந்த மலைகளின் நகரம்!

15

காலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். பக்தோரா விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவை சிலிகுரியின் சுற்றுலா மதிப்பை உயர்த்தியுள்ளன.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல் சிறந்த கல்வி நகரமாகவும் விளங்குகிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கிருக்கும் கல்வி நிலையங்களில் பயில்கிறார்கள்.

புவியியலின்படி ஒருபுறம் வங்கதேசத்தாலும், மறுபுறம் நேபாலும் சூழப்பட்டுள்ள இந்நகரம் இந்தியாவை அதன் வடகிழக்கு மாகாணங்களுடன் இணைக்கிறது.  

சிலிகுரி வட மாவட்டங்களின் சுற்றுலாத் துறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. சுற்றியுள்ள மற்ற சிறிய ஊர்களுக்கும், சிலிகுரிக்கு அருகில் இருப்பதால் ஏராளமான பயணிகள் செல்கிறார்கள்.

சிலிகுரியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இஸ்கான் கோவில், மஹாநந்தா வனவிலங்கு சரணாலயம், விஞ்ஞான நகரம், கரொனேஷன் பாலம், சலுகரா மொனாஸ்ட்ரி, மதுபான் பூங்கா, உம்ரோ சிங் படகு முகாம் என பலவகையான இடங்கள் உள்ளன.

திருவிழாக்களும், பண்டிகைகளும்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சிலிகுரியிலும் தீபாவளி, பாய் டிகா, துர்கா பூஜா, காளி பூஜா, கணேஷ் பூஜா போன்ற பண்டிகைகள் இங்கு கொண்டாடப்படுகின்றன.

பைசாகி மேளா போன்ற பழம்பெரும் பண்டிகைகள் மட்டுமல்லாது உடை அணிவகுப்புகள், பொருட்காட்சிகளும் இங்கு இவற்றையொட்டி நடத்தப்படுகின்றன. ஹஸ்த் ஷில்ப் ஃபெதெ, புத்தக திருவிழா, லெக்ஸ்போ திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் கஞ்சஞ்சங்கா மைதானத்தில் நடத்தப்படுகின்றன.

உணவு

சிலிகுரியின் உள்ளூர் மக்கள், பல இடங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களாதலால் கிடைத்த உணவுப் பதார்த்தங்களை ருசிக்கிறார்கள். நகரத்தின் பாரம்பரியத்தை இது சிறிதளவு சிதைத்திருந்தாலும் உள்ளூர் கலாச்சாரம் இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது.

சிலிகுரியின் உணவு வகைகள், பயணிகள் கண்டிப்பாக ருசிக்க வேண்டியவையாகும். கோழிக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி மற்றும் காய்கறிகளால் செய்யப்படும் மோமோ எனப்படும் ஒருவகை உணவு மிகவும் சுவை நிறைந்ததாகும். அதுமட்டுமல்லாது இங்கு வழங்கப்படும் தேநீர் மிகுந்த சுவையுள்ளதாக கருதப்படுகிறது.  

தொடர்பு

தங்குமிடங்கள் மற்றும் தொலைதொடர்பு வசதிகளில் சிலிகுரி வசதி நிறைந்ததாக இருக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற விடுதிகள் தங்களின் கிளைகளை இங்கு கொண்டுள்ளன/ அதுமட்டுமல்லாது தங்குமிடம், உணவுவிடுதிகளில் கூட இணையவசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ மையம் இங்கு இருப்பதால் பாதுகாப்பு நிறைந்த நகரமாக கருதப்படுகிறது.

பேரங்காடி கலாச்சாரம்

சமீபகாலமாக பேரங்காடி (mall) கலாச்சாரம் சிலிகுரியிலும் பரவத்துவங்கியிருக்கிறது. இங்கிருக்கும் பேரங்காடிகளான காஸ்மோஸ், ஆர்பிட் ஆகியவை குறிப்பிடத்தக்க தளங்களாக இருக்கின்றன.

அனைத்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களை நவீன முறையில் திரையிடும் இந்த பேரங்காடிகளில் தொழில்நுட்ப பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிலிகுரியை சுற்றிப்பார்க்க ரிக்‌ஷாப்பயணமே சிறந்ததாக கருதப்படுகிறது. உள்ளூர் பேருந்துகளும் சிறப்பான அனுபவத்தை தந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

சிலிகுரி பயணிக்க சிறந்த பருவம்

குளிர்காலத்தில் சிலிகுரி பயணிப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

சிலிகுரி அடைய வழி

சிலிகுரி மற்ற நகரங்களுடன் சாலை, விமான மற்றும் ரயில் மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளத்.

சிலிகுரி சிறப்பு

சிலிகுரி வானிலை

சிறந்த காலநிலை சிலிகுரி

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது சிலிகுரி

 • சாலை வழியாக
  பொது பேருந்து சேவை மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் இருந்து சிலிகுரிக்கு உள்ளது. கோல்கட்டாவில் இருந்து தினசரி பேருந்துகளும், தனியார் பேருந்து வசதிகளும் உள்ளன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  சிலிகுரிக்கு அருகாமையில் உள்ள ரயில் நிலையம் ஜல்பாய்புரி ஆகும்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  சிலிகுரி உள்ளூர் விமான நிலையம் 12கிமீ தொலைவில் உள்ள பக்தோக்ராவில் உள்ளது. டெல்லி, கோல்கட்டா, மும்பை ஆகிய நகரங்களுடன் விமான தொடர்பில் இருக்கும் சிலிகுரி காங்டாக்குடன் ஹெலிகாப்டர் தொடர்பில் உள்ளது. சர்வதேச பயணங்கள் மேற்கொள்வோர் கொல்கத்தாவில் இருந்து சிலிகுரிக்கு செல்லலாம்.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Aug,Mon
Return On
09 Aug,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
08 Aug,Mon
Check Out
09 Aug,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
08 Aug,Mon
Return On
09 Aug,Tue