Search
 • Follow NativePlanet
Share

பெல்லிங் - பனி மூடிய சிகரங்களின் எழில் தோற்றம்!

13

கடல் மட்டத்திலிருந்து 2150 மீ உயரத்தில் அமைந்துள்ளது பெல்லிங் நகரம். வளமையான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடனும், பனி மூடிய மலைகள் மற்றும் அதன் மேலிருந்து காணக் கிடைக்கும் சுற்றுவட்டக் காட்சிகளுடன் இருக்கும் பெல்லிங், சிக்கிம் மாநிலத்தில் காங்க்டாக்கிற்கு அடுத்த படியாக அதிகளவில் சுற்றுலா வரும் இரண்டாவது பெரிய சுற்றுலா தலமாக உள்ளது.

பெல்லிங் முந்தைய காலங்களில் காடுகளடர்ந்த நிலப்பரப்பாகவும், அதில் எக்கச்சக்கமான வன விலங்குகளை கொண்டதாகவும் இருந்தது. பமாயாங்ட்ஸே மற்றும் சங்காசோய்லிங் ஆகிய இரு பௌத்த மடாலயங்கள் வந்த பிறகு இந்த வனப்பகுதி குடியிருப்புகள் நிறைந்த கிராமங்களாக உருவெடுத்துள்ளது.

கலாச்சாரம்

லிம்பு என்ற மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழும் இடமாக பெல்லிங் உள்ளது. அவர்கள் மட்டுமல்லாமல், காம்தாக், முரிங்லா, டாம்லிங், லிங்டென் மற்றும் பெஹா ஆகிய இனத்தவரும் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்த மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. ஏலக்காய், சோளம், நெல், கோதுமை மற்றும் பக்வீட் ஆகிய பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.

திருவிழாக்களும் கொண்டாட்டங்களும்

வருடத்திற்கொருமுறை நடக்கும் கஞ்சன்ஜங்கா திருவிழாவின் போது இந்நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவின் போது ராங்கிட்-ல் ஒயிட்-வாட்டர் ராஃப்டிங், கயக் படகு ஓட்டுதல், மலையேற்றத்தை ஊக்குவிக்கும் விளையாட்டுக்கள், மலையில் பைக் ஓட்டும் மௌன்டன் பைக் மற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களும் நடத்தப்படும்.

இம்மக்களின் பாரம்பரிய நடனமான உடிங் தி ச்ஹாப்-ரங் (மேளம்) மற்றும் இதர கலாச்சார கலைகளும் இந்த திருவிழாக்காலத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த திருவிழாவின் போது மலர் கண்காட்சிகளும், உணவு மற்றம் அலங்கார கடைகளும் நடத்தப்படும். பெல்லிங்கிற்கு வருவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக இந்த நாட்கள் விளங்குகின்றன. ஆகஸ்டு மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழா, திபெத்திய நாட்காட்யின் 7-வது மாதத்தின் 15-வது நாளில் கொண்டாடப்படும்.

பெல்லிங்கில் காணத்தகுந்த சுற்றுலா தலங்கள்

பெல்லிங்கில் இருக்கும் பமாயாங்ட்ஸே மற்றும் சங்காசோய்லிங் ஆகிய பௌத்த மடாலயங்கள் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும். இவை தவிர சிங்ஷோர் பாலம், சாங்கே நீர்வீழ்ச்சி மற்றும் கெசுபேரி ஏரி ஆகியவை பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

பெல்லிங்கின் பருவநிலை

பெல்லிங்கின் பருவநிலை வருடம் முழுவமே சிறப்பாக இருக்கும். எனவே வருடத்தின் அனைத்து நாட்களும் வந்து பார்க்கக் கூடிய இடமாக பெல்லிங் விளங்குகிறது.

பெல்லிங்கிற்கு வர சிறந்த காலம்

கஞ்சன்ஜங்கா திருவிழா நடக்கும் காலம் தான் பெல்லிங் வருவதற்கு மிகவும் ஏற்ற காலமாகும். திபெத்திய காலண்டரில் வரும் 7-வது மாதத்தின் 15-ம் நாளில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பெல்லிங்கிற்கு செல்லும் வழிகள்

பெல்லிங் விமானம் மற்றும் இரயில் வழியாக முக்கிய நகரங்களுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

பெல்லிங் சிறப்பு

பெல்லிங் வானிலை

பெல்லிங்
17oC / 63oF
 • Partly cloudy
 • Wind: SSE 24 km/h

சிறந்த காலநிலை பெல்லிங்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது பெல்லிங்

 • சாலை வழியாக
  There is no route available in பெல்லிங்
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  பெல்லிங்கிற்கு அருகிலிருக்கும் இரயில் நிலையம் ஜல்பாய்குரியில் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, ஹெளரா, அலிப்பூர் மற்றும் டார்ஜிலிங் ஆகிய நகரங்களுக்கும் இரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  பெல்லிங்கிற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாக 124 கிமீ தொலைவில் உள்ள பக்டோக்ரா உள்ளது. சென்னை, கொல்கொத்தா, கௌகாத்தி மற்றும் மும்பையிலிருந்து விமானங்கள் இந்த விமான நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. பேங்காக் மற்றும் பாரோ-வில் இருந்தும் சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் இருந்து பெல்லிங்கிற்கு டாக்ஸி வசதிகளும் உள்ளன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jan,Sun
Return On
21 Jan,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Jan,Sun
Check Out
21 Jan,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Jan,Sun
Return On
21 Jan,Mon
 • Today
  Pelling
  17 OC
  63 OF
  UV Index: 6
  Partly cloudy
 • Tomorrow
  Pelling
  -3 OC
  26 OF
  UV Index: 6
  Partly cloudy
 • Day After
  Pelling
  -2 OC
  28 OF
  UV Index: 6
  Partly cloudy