போஜேஷ்வரர் கோவிலை பார்த்தவாறு நேர் எதிரே அமைந்திருக்கிறது பார்வதி குகை. பெட்வாவின் தெற்கே அமைந்திருக்கும் பார்வதி குகை, பாறையினால் ஆன ஒரு தங்குமிடம் போல இருக்கிறது.
இப்போது இந்தக் குகையில் ஆன்மீகத் துறவிகளின் உறைவிடமாக, அன்றாட வாழ்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கட்டிடக் கலை நுணுக்கங்களும், பண்டைய சிற்பங்களின் அழகும், நம்மை 11 ஆம் நூற்ற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும்.
இவ்விடம் ஆன்மீகத் துறவிகளின் மையமாகத் திகழ்வதால், இன்றளவிலும் மாசுபடாமல் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த எழிலுடன் அப்படியே அமைந்திருக்கிறது.
சுற்றுலாத் திட்டமிடும்போதே, போஜேஷ்வரர் திருக்கோவில், பாறை ஓவியங்கள் மற்றும் கற்சிற்பங்கள், பார்வதி குகை மற்றும் போஜர் அரசரின் மாளிகை போன்ற இடங்களை பார்க்கும் வகையில் திட்டமிட்டு, தொன்மையான இந்தியாவின் சிறப்பை உணரலாம்.



Click it and Unblock the Notifications