உஜ்ஜைன் - ஜ்யோதிர்லிங்கம் அமைந்துள்ள ஆன்மீக மையம்!

மத்தியப் பிரதேசத்தின் மிகப் பழமை வாய்ந்த நகரமான உஜ்ஜைன்,  உஜ்ஜயினி என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதற்கு போற்றத்தக்க வெற்றி வீரன் என்று பொருளாகும். இங்கு சமயஞ்சார்ந்த செயல்பாடுகள் அதிகமாக நடைபெறும். மேலும் உஜ்ஜைன் சுற்றுலா அங்கிருக்கும் பழமை வாய்ந்த பல கோவில்களுக்காக உலகில் பல மூலைகளில் இருந்து மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. ஷிப்ரா நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் சிவராத்திரி, கும்ப மேளா மற்றும் அர்த கும்ப மேளாவுக்கு பெயர் பெற்றது.

உஜ்ஜைன் - வரலாற்றுச் சுவடு!

உஜ்ஜைன் நகரத்தை சம்பந்தப்படுத்தி பல புராணக் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் அசோகர் மற்றும் விக்ரமாதித்யா போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடம் இது.

புகழ் பெற்ற கவி காளிதாசரும் தன் பாடல்கள் மற்றும் கவிதைகளை இங்கு இயற்றியுள்ளார். வேதங்கள் கூட இந்த இடத்தை பற்றி கூறுகின்றன. கந்த புராணத்தின் இரண்டு பகுதிகள் இந்த இடத்தில் தான் எழுதப்பட்டது என்று கூட நம்பப்படுகிறது.

மகாபாரதத்தில் உஜ்ஜைன் நகரத்தை தான் அவந்தி ராஜாங்கத்தின் தலைநகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் வாழும் புனித நகரமாக கருதப்படுகிறது இந்த இடம்.

ஹிந்துக்களின் புனித ஸ்தலமாக அறியப்படும் ஏழு இடங்களில் இதுவும் ஒன்று. மேலும் அசோகர், வரஹமிஹிரா, காளிதாஸ், விக்ரமாதித்யா மற்றும் பிரம்மகுப்தா போன்ற புகழ் பெற்றவர்களுடன் தொர்புடையதாக விளங்குகிறது உஜ்ஜைன்.

உஜ்ஜைன் - தெருவோர உணவு விரும்பிகளுக்கு ஏற்ற இடம்!

தெருவோரம் கிடைக்கும் உணவுகளுக்கு புகழ் பெற்றது உஜ்ஜைன். டவர் சௌக் என்ற இடத்தில் இவ்வகை உணவுகளை சுற்றுலாப் பயணிகள் உண்ணலாம். இந்த வகை உணவுகளோடு எச்சில் ஊறும் சாட்ஸ், பாணி பூரி, நெய் கலந்த சோளம், பேல் பூரி போன்ற நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு மகிழலாம்.

பழங்குடியினரின் அணிகலன்கள், ஆடை வகைகள் மற்றும் மூங்கில் பொருட்களுக்கு புகழ் பெற்றது உஜ்ஜைன். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பொருட்களுடன் நினைவுச் சின்னங்களையும் உள்ளூர் சந்தையிலிருந்து வாங்கிச் செல்லலாம்.

உஜ்ஜைன் மற்றும் அதனருகில் உள்ள ஈர்ப்புகள்!

உஜ்ஜைன் சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல புகழ் பெற்ற ஈர்ப்புகளை அளிக்கிறது. சின்தமன் கணேஷ் கோவில், படே கணேஷ்ஜி கா மந்திர், ஹர்சித்தி கோவில், விக்ரம் கீர்த்தி மந்திர், கோபால் மந்திர் மற்றும் நவக்ரஹ மந்திர் போன்றவைகள் இங்குள்ள சில புகழ் பெற்ற கோவில்களாகும்.

இவை மட்டுமில்லாமல் இந்நகரத்தின் புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது மகாகலேஷ்வர் கோவில். சிவன் கோவிலான இது இந்தியாவிலுள்ள 12 ஜ்யோதிர்லிங்கத்தில் ஒன்றாகும்.

இந்த கோவில் ஐந்து நிலையாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே விநாயகர், ஓம்காரேஷ்வர் சிவன், பார்வதி, கார்த்திகேயா மற்றும் சிவபெருமானின் வாகனம் நந்தி போன்ற கடவுளர்களின் சிலைகள் உள்ளன.

இது போக சித்தாவட், பர்த்ரிஹரி குகைகள், சண்டிபணி ஆசிரமம், கால பைரவர், துர்காதாஸ் கி சத்ரி, கட்கலிகா, மங்கள்நாத் மற்றும் பிர் மட்ஸ்யேந்த்ரநாத் போன்ற சில முக்கிய இடங்களும் இங்கு அமையப்பெற்றிருக்கின்றன.

கலியதே அரண்மனையையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட விரும்புவார்கள். அதனுடன் சேர்ந்து அருமையான கட்டிடக்கலைக்கு புகழ் பெற்ற காளிதாஸ் கல்விக்கழகம் மற்றும் சண்டல்வாலா கட்டிடம் போன்றவைகளையும் பார்வையிட விரும்புவார்கள்.

இங்குள்ள வேதாசாலை சிறந்த அறிஞராக விளங்கிய ஜெய்சிங் அரசரால் கட்டப்பட்டது. இதே போல் இவர் இந்தியா முழுவதும் பல வானியல் ஆய்வகத்தை கட்டியுள்ளார்.

உஜ்ஜைன் நகரம் வானியல் படிப்புகள் மற்றும் ஆய்வுகளுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள விக்ரம் பல்கலைகழகத்தில் நடக்கும் பண்பாட்டு மற்றும் அறிவு சார்ந்த பல செயல்பாட்டினால் இது புகழ் பெற்று விளங்குகிறது.

காளிதாஸ் கல்விக்கழகம் சமஸ்கிருதம் மற்றும் பாரம்பரிய இந்திய மொழிகளை கற்றுத் தரும் கல்வி மையம் ஆகும். இந்த நகரத்தை சுலபமாக வலம் வருவதற்கு ஆட்டோக்கள், பேருந்துகள், குதிரை வண்டி போன்ற வாகனங்களை பயன்படுத்தலாம்.

இருப்பினும் ஷேர் ஆட்டோக்களில் தான் சிக்கனமாக பயணிக்கலாம். அதனால் முக்கால்வாசி சுற்றுலாப் பயணிகள் ஷேர் ஆட்டோவில் பயணிக்கவே விரும்புவார்கள்.

உஜ்ஜைனுக்கு பயணிக்க!

இந்தூர் விமான நிலையம் தான் உஜ்ஜைன் நகரத்திற்கு அருகில் இருக்கும் விமான நிலையமாகும். உஜ்ஜைன்னில் இருந்து இந்த விமான நிலையம் 55 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.

உஜ்ஜைன் இரயில் நிலையத்திலிருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை, போபால், இந்தூர், அகமதாபாத் மற்றும் கஜுராவோவிலிருந்து உஜ்ஜைன்னுக்கு தரை வழியாகவும் செல்லலாம்.

இன்டோர், போபால், கோட்டா மற்றும் குவாலியர் போன்ற இடங்களில் இருந்து உஜ்ஜைன்னுக்கு சீரான பேருந்து சேவைகள் உள்ளன. உஜ்ஜைன் இரயில் நிலையம் அருகே சிக்கன ஹோட்டல்கள் பல இருக்கின்றன. உஜ்ஜைன்னில் எப்போதும் உச்சநிலை வானிலையே நிலவும்; ஒன்று உச்சநிலை வெயில் அல்லது நடுங்கும் குளிர் நீடிக்கும்.

உஜ்ஜைன்னுக்கு செல்ல சிறந்த பருவம்

உஜ்ஜைன்னுக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையாகும்.

Please Wait while comments are loading...