Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உஜ்ஜைன் » வானிலை

உஜ்ஜைன் வானிலை

உஜ்ஜைன்னுக்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை.  அதுமட்டுமல்லாமல் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும் இங்கு வரலாம். எனினும் இந்த காலகட்டத்தில் வெப்ப நிலை ஈரப்பதத்துடன் இருப்பதால் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களே சிறந்ததாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

உஜ்ஜைன்னில் கோடைக்காலம் மார்ச் மாதம் ஆரம்பித்து ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கும். இந்த மாதங்கள் மிகவும் கொடுமையானது. இந்த நேரத்தில் தட்ப வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.

மழைக்காலம்

உஜ்ஜைன் நகரத்தில் பருவக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும். இந்தக் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஒரு குட்டி சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யலாம்.

குளிர்காலம்

உஜ்ஜைன் நகரத்தில் குளிர் காலம் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் கடைசி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் பகல் நேரத்தில் குளுமையான வானிலை நிலவும். பகல் நேரத்தில் தட்ப வெப்ப நிலை அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இரவு நேரத்தில் வெப்ப நிலை உறையும் அளவிற்கு இருக்கும். இந்த நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இறங்கும்.