போபால் - மனதை கொள்ளையடிக்கும் பிரமிப்பு!

இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

கி.பி. 1000 முதல் கி.பி. 1055 வரை ஆட்சி செய்து வந்த பராமர வம்ச அரசரான போஜ ராஜரால் உருவாக்கப்பட்ட இந்த நகரம், மனதை வருடும் வரலாற்றை கொண்டிருக்கிறது.

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நகரத்தின் நவீன கால அடையாளங்கள் தோஸ்த் முகம்மது கான் என்பவரால் உருவாக்கப்பட்டன. பின்னர் நவாப்களால் ஆளப்பட்டு வந்த இந்த நகரத்தின் கடைசி போபால் நவாபாக இருந்தவர் ஹமீதுல்லா கான் என்பவராவார்.

போபால் நகரத்தின் கலை, கட்டிடங்கள், இசை, உணவுகள் மற்றும் கலாச்சாரத்தில் முகலாய மற்றும் ஆப்கானியர்களின் தாக்கம் நிரம்பவே இருப்பதை காண முடியும். ஏப்ரல் 1949-ல் முறையாக இந்திய யூனியனில் இணைந்த இந்த நகரம், அது முதலாகவே இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான பாத்திரத்தை ஏற்று வந்திருக்கிறது.

போபாலும் சுற்றுலாவும்!

இந்தியாவின் முக்கியமான விரும்பத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போபால் நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான இந்திய மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆர்வமூட்டக் கூடிய வரலாறு நவீன காலத் தோற்றத்தில் வெள்ளி வீதிகளில் உலவிக் கொண்டிருக்கும் இந்நகரம் சுற்றுலாப் பயணிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இது மட்டுமல்லாமல், மிகவும் கவர்ச்சியான சுற்றுலா தலமாகவும் போபால் விளங்கி வருகிறது. இந்த நகரத்தின் புவியியலமைப்பின் காரணமாக சிறுத்தைகளின் தாயகமாக விளங்கும் வான் விஹார் என்ற வனவிலங்கு பூங்காவும் உள்ளது.

வரலாற்று ஆர்வலர்களுக்கு விருப்பமான இடமாக தொல்பொருள் அருங்காட்சியகமும், பாரத் பவனும் திறந்திருக்கும் வேளையில், சமயப் பற்றுடையவர்களின் விருப்பமான இடமாக பிர்லா மந்திர், மோடி மசூதி மற்றும் ஜும்மா மசூதி ஆகியவை உள்ளன.

கலைகளை விரும்பும் கலாரசிகர்கள் இங்கிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான அருங்காட்சியகங்கள் மற்றும் கோவில்களுக்குச் செல்லும் போது பழங்காலக் கலைஞர்களின் மகோன்னதமான கை வேலைப்பாடுகள் அவர்களின் கண்களுக்கு விருந்தாக கிடைக்கும்.

போபாலின் பருவநிலையும், போக்குவரத்தும்!

மித வெப்ப மண்டல பருவநிலையை பெற்றிருக்கும் இந்நகரம் கோடை, மழை மற்றும் குளிர்காலங்களில் சுற்றுலா வரும் போது மிகவும் கடினமானதாகவே உள்ளது. எனினும், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் சுற்றுலாவிற்கேற்ற மிகச்சிறந்த மாதங்களாக கருதப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், உலகத்தின் அனைத்து பகுதிகளுடனும் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் மிகச்சிறப்பாக இணைக்கப்பட்டுள்ள நகரமாகவும் போபால் உள்ளது.

போபால் நகரமும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும்

போபால் நகரத்தில் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. போபால் நகரத்தின் புறநகர் பகுதிகளில் இருக்கும் கீவ்ரா அணைக்கட்டு மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகவும் மற்றும் இந்நகரத்தின் அற்புதமான காட்சிகளைக் காட்டவல்ல இடமாகவும் உள்ளது.

ஒரு மலையுச்சியில் அமைந்திருக்கும் மனுபான் கி டெக்ரி என்ற இடம் போபால் நகரத்தின் சுற்றுவட்டக் காட்சியைக் காணச் செய்வதோடு மட்டுமல்லாமல், சமண சமயத்தவரின் மத வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது.

போபாலின் புறநகர்ப் பகுதியில் உள்ள மற்றுமொரு சுற்றுலா தலமான ஷாபூரா ஏரிக்கு அருகில் உள்ள பூங்காவிற்கு மாலை வேளைகளிலும், வார இறுதி நாட்களிலும் காலாற நடந்து செல்வதற்காகவே மக்கள் வந்து குவிவது வழக்கம்.

சிவபெருமானுக்கான வழிபாட்டுத்தலமாக விளங்கும் குஃபா மந்திர் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. போபாலில் சில வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களும் உள்ளன. அவற்றில் கோஹர் மஹால், சௌகத் மஹால், புரான கிலா மற்றும் சதார் மன்ஸில் ஆகியவை முக்கியமானவைகளாகும்.

Please Wait while comments are loading...