Search
  • Follow NativePlanet
Share

இடார்ஸி - வர்த்தக சந்திப்பு!

12

'இண்ட்' மற்றும் `ராஸி'க்களின் பூமி!

இடார்ஸி அதன் முந்தய காலங்களில் மேற்கொண்ட வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தப் பெயரைப்பெற்றுள்ளது. முந்தய காலங்களில் இந்நகரம் செங்கற்கள்(இண்ட்) மற்றும் கயிறு (ராஸி) வர்த்தகத்திற்கு பெயர் பெற்றது.

அதன் காரணமாக இது `இடார்ஸி' என அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று இது பிளைவுட் வர்தகத்திற்கு புகழ் பெற்று விளங்குகிறது. கனிம வளம் மிக்க இந்த நகரத்தில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலை இந்திய ராணுவத்தின் ஆயுதங்களின்  தேவையை தீர்த்து வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இங்குள்ள சோயா எண்ணெய் ஆலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இந்த நகரத்தை ஒரு பிரதம வர்த்தக மையமாக மாற்றியுள்ளது.

இடார்ஸி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இடார்ஸி சுற்றுலா பயணிகளுக்கு மிகச் சிறந்த சுற்றுலா இடங்களை தருகிறது. அவற்றுள் டாவா ஆற்றில் அமைந்துள்ள டாவா நீர்த்தேக்கம் மற்றும் போரி வனவிலங்கு சரணாலயம் போன்றவை மிக முக்கியமானவை.

இந்த நகரத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல மதத் தளங்கள் உள்ளன. அவற்றுள் இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம், போதி மாதா மந்திர், ஹுஸைனி மஜ்ஜித், போன்றவை முக்கியமானவை. இங்கு உள்ள தெருக்களில் கைகளால் செய்யப்பட்ட கவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இடார்ஸியை எவ்வாறு அடைவது?

இடார்ஸியை போபாலில்  இருந்து மிக எளிதாக அணுகலாம். இது சாலை மற்றும் ரயில்கள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH-69, இடார்ஸி வழியாக செல்கிறது. இந்த நகரத்தில்  சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளன.

இடார்ஸியை பார்க்க சிறந்த நேரம்

குளிர் காலமே இந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் ஆகும்.

இடார்ஸி சிறப்பு

இடார்ஸி வானிலை

சிறந்த காலநிலை இடார்ஸி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது இடார்ஸி

  • சாலை வழியாக
    இடார்ஸி அருகிலுள்ள நகரங்களுடன் குறிப்பாக போபாலுடன் பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. போபாலில் இருந்து சாதாரண டாக்சி மூலம் 4 பேர் இடார்ஸியை அடைய ரூ 2200 செலவாகும். அதே சமயம் ஏ/சி கார்களில் வசதியாகச் செல்லவதற்கு ரூ 3000 வரை செலவாகும். இடார்ஸியை அடைவதற்கு 7 பேர் பயணம் செய்யக்கூடிய படகுகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இடார்ஸி மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய ரயில்வே சந்திப்பாகும். இது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் இடார்ஸியை அடைவது என்பது மிகச் சுலபமானது மற்றும் சிக்கனமானது. ரயில் நிலையத்தில் இருந்து நகரத்தை அடைய ஏராளமான ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    இடார்ஸிக்கு அருகில் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையம் சுமார் 111 கிமீ தொலைவில் உள்ளது. சர்வதேச விமான நிலையமான இங்கிருந்து பல விமானங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. போபாலில் இருந்து சாலை மூலம் இடார்ஸியை அடைய சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu