ராஜா போஜ் விமான நிலையம் என்று அழைக்கப்படும் போபால் விமான நிலையம், போபால் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, இந்தூர் மற்றும் குவாலியர் நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஷார்ஜா மற்றும் துபாய்க்கும் சர்வதேச விமானங்கள் போபாலில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சில சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் இங்கிருந்து செயல்பட்டு வருகின்றன.