Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போபால் » ஈர்க்கும் இடங்கள் » மோடி மசூதி

மோடி மசூதி, போபால்

30

போபால் நகரத்தின் வரலாற்று பக்கங்கள் மட்டுமல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலும் தனியிடம் பெற்ற தலமாக மோடி மசூதி உள்ளது.

1860-ம் ஆண்டில் ஆட்சி செய்து வந்த சிக்கந்தர் பேகம் என்ற முஸ்லீம் அரசி இந்த மசூதியை கட்டுவதற்கான ஆணையை பிறப்பித்தார். அந்நாட்களில் நன்கு படித்தவராக இருந்த அவர், வெளித்தோற்றத்தில் நவீன கால மங்கையாகவும் உலவி வந்தார்.

டெல்லியிலுள்ள ஜும்மா மசூதியின் வடிவமைப்பையே பெரிதும் பெற்றுள்ள மோடி மசூதி, அந்த மசூதியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. அளவில் ஜும்மா மசூதியை விட சிறியதாக இருந்தாலும், மோடி மசூதி, அதன் கலைநயமிக்க கட்டிடக்கலை மற்றும் அற்புதமான வடிவமைப்புகளின் காரணமாக பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

கருஞ்சிவப்பு நிற கோபுரங்கள் மற்றும் தங்க ஈட்டி போன்ற வடிவங்களை கொண்டுள்ளதால் காண்பவரைத் திணறடிக்கும் கலை மோடி மசூதிக்கு கைவந்த கலையாக உள்ளது.

மின்னும் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இந்த மசூதி வெண்மையாக பளபளப்புடன் காணப்படுகிறது. இந்த வண்ணச் சிதறல் மூலமாகவே இந்த மொத்த இடமும் சொர்க்கம் போல பளபளக்கத் துவங்குகிறது. இதன் காரணமாகவே இந்த மசூதி 'முத்து மசூதி' என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat